இந்திய ஆண்களிடையே பரவும் "அந்த" பிரச்சினை.. உடலுறவை பாதிப்பது மட்டுமின்றி.. உயிரே கூட போகுமாம்
சென்னை: ஆண்களிடையே இப்போது சத்தமில்லாமல் ஒரு பிரச்சினை பரவி வருகிறது. இது ஒருவரது அந்தரங்க வாழ்க்கை மிக மோசமாகப் பாதிப்பதாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு, புகை மற்றும் மதுவைத் தவிர்த்த பிறகும் இது உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்கள் உடலில் உள்ள வைட்டமின் டி அளவைச் சரிபார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை காரணமாக நமது உடலிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாகக் கருவுறுதல் விவகாரத்தில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பும் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே ஆண்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினை குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆண்களே கவனம்
அதாவது பொதுவாக ஆண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பராமரித்து, தினசரி உடற்பயிற்சி செய்து, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தால் அது அந்தரங்க வாழ்க்கைக்கு நல்லது என்பார்கள். ஆனால், இதைச் செய்தாலும் வைட்டமின் டி உடலில் குறைவாக இருந்தால் அது கருவுறுதலைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எப்போதும் சோர்வாக இருப்பது, எலும்பு வலி, தசை பலவீனமாக உணர்வது, மனநிலை அடிக்கடி மாறுவது ஆகியவை நீண்ட கால வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தின் உடலில் குறைந்தால் அது உங்கள் பாலியல் உறவைப் பாதிக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் பார்மகாலஜியில் இது தொடர்பான விரிவான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
வைட்டமின் டி குறைபாடு
அதில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக ED எனப்படும் விறைப்புத்தன்மை செயலிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது வைட்டமின் டி அளவு குறைந்தால் அது எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மட்டுமே பாதிக்கும் என இதுவரை ஆய்வாளர்கள் நனைத்த நிலையில், அது பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
என்ன சிக்கல்
விறைப்புத்தன்மை செயலிழப்பு (ED) என்பது ஆண்களிடையே ஏற்படும் பிரச்சினை.. இந்தச் சிக்கல் யாருக்கு வேண்டுமானாலும் ஓரிரு முறை ஏற்படலாம். ஆனால், தொடர்ந்து அல்லது மோசமான இடி பாதிப்பு உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கலாம்.
உயிரே போகலாம்
மேலும், நரம்பைச் சேதப்படுத்தி, மன அழுத்தம் அல்லது இதய நோய், நீரிழிவு நோய், பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்தலாம். இது இதயம் மற்றும் ரத்த நானங்களைப் பாதிக்கும் சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். இதனால் உயிரே போகும் அபாயமும் இருக்கிறது. எனவே, உடலில் வைட்டமின் டி குறைவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
வைட்டமின் டி ஏற்பிகள் ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் அதிகம் இருக்கிறது. இது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. வைட்டமின் குறையும்போது அது பாலியல் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. இது முக்கியமான கண்டுபிடிப்பு என்ற போதிலும் மனிதர்களிடையே ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்போது தான் தெளிவாக என்ன சிக்கல் என்பது தெரிய வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் டி அதிகரிப்பது எப்படி
வைட்டமின் டி மற்ற ஊட்டச்சத்துகளைப் போல அரிதானது எல்லாம் இல்லை.. மீனில் வைட்டமின் டி கொட்டி கிடக்கிறது.. சைவம் என்றால் காளானைச் சாப்பிடலாம். மேலும், பால், முட்டை ஆகியவற்றிலும் வைட்டமின் டி இருக்கிறது.. இவை கூட வேண்டாம். தினசரி நமது உடல் வெயிலில் பட்டால் அதுவே ஒரு நல்ல வைட்டமின் டி சோர்ஸாக இருக்கிறது. தினசரி காலை மாலை என 30 நிமிடங்களில் உடல் வெயிலில் பட்டால் போதுமான வைட்டமின் டி கிடைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது சாதாரணச் செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
bmw, பென்ஸ் காரில் போறாங்க.. டாக்டர்களுக்கு 5 லட்சம் சம்பளம்.. ஐடி ஊழியருக்கு 30k தான் என குமுறல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications