Head ache remedy: மூட்டு வலி+ தலைவலியா? 5 துளி "கருப்பு எண்ணெயால்" மசாஜ் செய்தால் போதும்!
சென்னை: கருப்பு ஏலக்காயை கொண்டு மூட்டு வலி, தலைவலியை குணப்படுத்தலாம். ரத்த அழுத்தம் இருப்போருக்கு இது அருமருந்தாக அமைகிறது. குடலில் ஏற்படும் கோளாறுகளுக்கும் இது நல்ல பலனை தருகிறது. இந்த கருப்பு ஏலக்காய் என்பது வழக்கமான ஏலக்காயை விட பெரிய அளவில் இருக்கும்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கருப்பு ஏலக்காய் என்பது மூட்டுவலிக்கும் தலைவலிக்கும் அருமருந்தாக அமைகிறது. இந்த கருப்பு ஏலக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

மூட்டு வலி மற்றும் தலைவலி
மூட்டு வலி, தலைவலி அதிகம் இருந்தால், 5 துளிகள் கருப்பு ஏலக்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் மூட்டு மற்றும் வலியுள்ள தலைப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகச்சிறப்பான பொருள். அதுவும் ஒரு டம்ளர் சுடுநீரில் கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
உடல் முழுக்க
கருப்பு ஏலக்காயை டீ போன்று தயாரித்து குடித்தால் உடல் முழுக்க உள்ள அழுக்குகள் சுத்தம் பெற்று விடும். சிறுநீரக தொற்றுகள், வயிற்றில் சேர்ந்துள்ள நுண் கிருமிகள் போன்றவற்றையும் சேர்த்து அகற்றி விடுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள நச்சு தன்மை உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த கருப்பு ஏலக்காய் உதவுகிறது.
தொப்பை பிரச்சினையா
இன்று பத்தில் 6 பேருக்கு தொப்பையே மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எதை செய்தலும் அங்கு தொப்பை தான் பெரும் தடையாகவும் உள்ளது. இதை மிக எளிமையாக சரி செய்ய கருப்பு ஏலக்காய் போதும். அடிவயிற்றில் இருக்க கூடிய கொழுப்புகளை கரைத்து தொப்பையை விரட்டி அடித்து விடும்.
ஆரோக்கியமற்ற இதயமா
கருப்பு ஏலக்காயின் பயனில் மிக முக்கியமானது இந்த இதயம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான். இரத்தம் உறைதல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகளுக்கு இந்த வகை ஏலக்காய் அருமையான பலனை தருகிறது.
குடல் நோய்களுக்கு
ஒருவருக்கு குடலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அது உடலின் முழு இயக்கத்தையும் சேர்த்தே பாதிக்க கூடும். அந்த வகையில் குடல் பாதையில் ஏதேனும் பாதிப்பு அல்லது குடல் நோய் உங்களுக்கு இருந்தால் அதனையும் இந்த கருப்பு ஏலக்காய் குணப்படுத்த வல்லது.
தேவையான பொருட்கள்...
இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தர முடியுமாம்.
தேவையான பொருட்கள்...
கருப்பு ஏலக்காய் 2
இஞ்சி பொடி 1/2 ஸ்பூன்
வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் 1 கிளாஸ் நீரை கொதிக்க விட்டு, அதன் பின் கருப்பு ஏலக்காய் பொடியை செய்து போடவும். அடுத்து இவற்றுடன் இஞ்சி பொடி, வெந்தய பொடி, ஆகியவற்றையும் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பின்னர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பருக்களுக்கு தீர்வு..
முகப்பருக்களை விரட்டி அடிக்கவும் இந்த கருப்பு ஏலக்காய் உதவும். அத்துடன் முகத்தை வெண்மையாகவும் மாற்ற கூடும்.
கருப்பு ஏலக்காய் பொடி 1 ஸ்பூன்
கடலை மாவு 2 ஸ்பூன்
மஞ்சள் 1/4 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் கருப்பு ஏலக்காய் பொடியை கடலை மாவுடன் கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் மஞ்சள் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றையும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு மிக விரைவில் பருக்களுக்கு முற்றுப்புள்ளி தரும்.
பொறுப்பு துறப்பு: இந்த பொருளை மேற்பூச்சாகவோ உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதையோ செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்வதே பாதுகாப்பானது.












Click it and Unblock the Notifications