ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை கண்டறிவது எப்படி? 33 பாயிண்டில் ஒன்று இருந்தாலும் பாதிப்புதான்!
சென்னை: ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு அடையாளம் கண்டு உடனே சிகிச்சை அளிப்பது? என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "ஆட்டிசம்" என்பது தொடர்பு கொள்வதிலும் பேசுவதிலும் பழகுதலிலும் ஏற்படும் தீவிர வளர்ச்சிக் குறைபாடாகும். இது "மனநோய்" அன்று, மாறாக மன வளர்ச்சிக் குறைபாடாகும். எத்தனை விரைவில் கண்டறியப்படுகிறதோ அத்தனை விரைவாக மொழிப் பயிற்சி / பேச்சுப் பயிற்சி / நடத்தைப் பயிற்சிகளை தீவிரமாக வழங்கி குறைபாடுகளைக் களைய முடியும்.

இந்தியாவில் 500 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவது தெரிகிறது. ஆட்டிசம் கண்டறியப்பட்ட உடனே விரைவாக குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது குழந்தையை மீட்டு ஏனைய குழந்தைகள் போல நல்ல வாழ்க்கையை வழங்க முடியும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அடையாளம் காணுவதற்கு அவர்கள் வெளிப்படுத்தும் கீழ்காணும் விசயங்கள் உதவக்கூடும். கீழ்காணும் விசயங்களில் குழந்தை ஒன்றோ அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தினால் கட்டாயம் குழந்தைகள் மன நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி ஆட்டிசம் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
1. குழந்தை எப்போதும் தனியாக இருக்கவே விரும்பும்
2. அதனுடன் மற்ற குழந்தைகளும் நபர்களும் இருக்கிறார்கள் என்பதே அறியாமல் அந்த குழந்தை ஒரு உலகில் இருக்கும்.
3. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது / சில நேரங்களில் காது கேட்கவில்லையா என்று கூட எண்ணும் அளவு குரல்களுக்கு செவிமடுக்காமல் இருக்கும்.
4. நேராக கண்ணோடு கண் பார்த்து பேசாமல் இருப்பது / மற்றொருவரின் கண் பார்வையை தவிர்க்குமாறு வேறு இடங்களில் பார்ப்பது.
5. ஒருவரிடம் ஒரு குழந்தை இருக்கும் போது மற்றொருவர் வந்து தூக்குவதற்காக கை நீட்டும் போது சராசரிக் குழந்தைகள் ஆர்வத்துடன் இன்னொருவரிடம் செல்லும். ஆட்டிசம் குழந்தைகள் அத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்
6. அடிபட்டாலும் சரி உடல் சரியில்லாமல் போனாலும் சரி சராசரிக் குழந்தைகள் தாய் தந்தை ஸ்பரிசத்திற்கும் ஆறுதலுக்கும் ஏங்கும். ஆனால் ஆட்டிசம் குழந்தைகள் இத்தகைய ஆறுதல்களைத் தேடாமல் இருப்பார்கள்.
7. பெற்றோர்களைப் பார்க்கும் போது பெற்றோர் புன்னகைக்கும் போது மறு புன்னகை முறுவல் தர மாட்டார்கள்.
8. ஏனைய குழந்தைகளுடன் சேர்வதிலும் அவர்களுடன் விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்
9. ஒரு விசயத்தின் மீது தனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தத் தெரியாது / வெளிப்படுத்த மாட்டார்கள்
10. இந்த விசயம் பிடித்திருக்கிறது என்று விரும்பியதைக் கை நீட்டி கேட்கத் தெரியாது
11. அவர்கள் செய்யும் விசயங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றை பிறர் பார்வைபடுமாறு பிறரது கவனத்தைக் குவிக்குமாறு செய்யத் தெரியாது
12. ஒரு பொம்மையை பெரியவர்கள் அதோ பார் என்று கை நீட்டி காட்டினாலும் உடனே அந்த பொம்மையை பார்க்க மாட்டார்கள்
13. குழந்தையை கையில் வைத்திருக்கும் பெரியவர்கள் எந்த திசை நோக்கி எங்கு பார்க்கிறார்களோ அதை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்
14. ஒவ்வொருவராக மாறி மாறி அவரவர் முறை வரும் போது விளையாடும் விளையாட்டுகளை விளையாடுவதற்கு அதிக சிரமப்படுவார்கள்.
15. பெரியவர்கள் செய்யும் விசயங்களை சராசரிக் குழந்தைகள் அப்படியே செய்யும். ஆனால் ஆட்டிசம் குழந்தைகள் அப்படியே செய்ய மாட்டார்கள்.
16. ஏனைய குழந்தைகள் வீடு கட்டி விளையாடுவார்கள் , போன் பேசுவது போல நடித்து விளையாடுவார்கள் ஆனால் ஆட்டிசம் குழந்தைகள் மேற்சொன்னவற்றை செய்ய மாட்டார்கள்
17. அசாதாரணமாக ஒரே மாதிரி விளையாட்டுகளை மீண்டும் மீண்டும் விளையாடுவார்கள். கற்பனை செய்து விளையாடும் சக்தி இவர்களுக்கு இருக்காது.
18. ஒருபக்கம் சில விசயங்களுக்கு அதீத பயம் இருக்கும். மற்றொரு பக்கம் அபாயம் குறித்து அஞ்சாமல் விழிப்புணர்வில்லாமல் சில விசயங்களை செய்வார்கள்.
19. மொழியைப் பேசுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வது அல்லது பேசாமலே இருப்பார்கள்.
20. மிகவும் அரிதாகவே செய்கை மொழி ( GESTURES) மூலம் தொடர்பு கொள்வார்கள். செய்கை மொழியும் உபயோகிக்காமல் இருக்கலாம்.
21. தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரியவர்களை தோள்களைப் பிடித்து இழுத்துச் செல்வது / பெரியவர்களின் கைகளை ஒரு பொருளாக கற்பனை செய்து கொண்டு விளையாடுவது
22. தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் "எனக்கு முட்டை வேண்டும்" என்று கேட்காமல்
அதன் பெயரைக் கூறி உதாரணம் - ஓல்கா என்பது பெயராக இருந்தால், ஓல்காவுக்கு முட்டை கொடுங்க என்று கேட்பது
23. கேட்கும் விசயங்களை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருப்பது
24. ஒரு உரையாடலைத் தொடங்கத் தெரியாது.உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் தெரியாது. எதிர் கேள்விகள் கேட்கத் தெரியாது.
25. நோட்டில் உள்ள பேப்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக புரட்டிக் கொண்டே இருப்பது , சுழலும் சுத்தும் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டிருப்பது, விளையாட்டு சாமான்களை ஒழுங்கு படுத்தி வரிசையாக அடுக்கி வைத்திருப்பது ( சராசரிக் குழந்தை அவ்வாறு வரிசையாக ஒழுங்காக அடுக்கி வைக்காது)
26. விளையாட்டு கார் கொடுத்தால் அதில் உள்ள சக்கரத்தை மட்டும் உன்னிப்பாக சுற்றிக் கொண்டே இருப்பது, பொம்மைகளில் ஸ்விட்ச்களை மட்டும் போட்டு ஆஃப் செய்வது என்று விளையாடுவார்கள்
27. வலி உணர்வு மிகக் குறைவாகவே இருக்கும்
28. தினசரி அன்றாட வாழ்வியல் மற்றும் சூழல் ஒரே மாதிரி இருப்பதையே விரும்புவார்கள். அன்றாட வாழ்வில் சிறு மாற்றம் வந்தாலும் அதை எதிர்ப்பார்கள்
29. செய்த விசயங்களையே மீண்டும் மீண்டும் சளைக்காமல் செய்வார்கள். பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவார்கள்
30. பெற்றோர் அணைக்கும் போது இவர்கள் கைகளை விரித்து அணைக்க மாட்டார்கள். அணைத்தாலும் ஸ்திரமாக இருப்பார்கள்.
31. கைகளை சுற்றிக் கொண்டே இருப்பது, கைகளை ஆட்டிக்கொண்டே இருப்பது, தலையை ஆட்டிக் கொண்டே இருப்பது. சில விசித்திரமான விசயங்களை செய்வார்கள்
32. பிறர் படும் துயர் மற்றும் பிணி குறித்து அறியாமையில் இருப்பார்கள்
33. நர்சரி ரைம்ஸ்கள், பாடல்கள் , விளம்பரத்தில் வரும் பாடல்கள் , இன்னும் பல விசயங்களிலும் நல்ல நினைவாற்றலுடன் இருப்பார்கள். எனினும் யாருடனும் பேச மாட்டார்கள். பழக மாட்டார்கள். கேள்விக்கு பதில் கூற மாட்டார்கள்.
எனவே ஆட்டிசத்தை உடனே அடையாளம் கண்டு முறையான அறிவியல் ரீதியான சிகிச்சை ( SPEECH THERAPY BEHAVIOUR THERAPY ) மற்றும் தொழில்முறைபயிற்சி( OCCUPATIONAL THERAPY) அதனுடன் பிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவ சிகிச்சையும் சேர்த்து செய்ய வேண்டும் என்பதை மட்டும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரகிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications