டிவி விளம்பரத்தில் வருவது போல் சப்பாத்தியை இரு விரல்களால் பிரிக்க வேண்டுமா? இந்த 5 பொருட்கள் போதுமே!
சென்னை: சப்பாத்தி மாவு பிசைந்து கல்லில் போட்டு எடுக்கும் போது அது சாஃப்ட்டாக இல்லை என்ற கவலை பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கிறது. உணவில் சிறிய சிறிய டிப்ஸ்களை பாலோ செய்தாலே போதும் ருசியும் அவுட்புட்டும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில் சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். இட்லி, தோசை என சாப்பிட்டாலும் தினமும் அதையே சாப்பிடுவதற்கு முகத்தில் அடித்தாற் போல் இருக்கும். இதற்காக சப்பாத்தி, பூரி, பரோட்டா, பொங்கல், உள்ளிட்ட உணவுகளை சமைப்போம்.

இட்லி, தோசையை விட சப்பாத்தி உடலுக்கு மிகவும் நன்மை செய்யும். அப்படிப்பட்ட சப்பாத்தியை எப்போது செய்தாலும் கல் மாதிரி இருக்கிறது என்ற கவலை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. என்னதான் டிசைன் டிசைனாக டிப்ஸ்களை பாலோ செய்தாலும் இப்படித்தான் இருக்கிறது என கவலை உள்ளது.
இந்த நிலையில் சாஃப்ட்டாக சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து செஃப் வெங்கடேஷ் பட் சில டிப்ஸ்களை குறிப்பட்டுள்ளார். அதன்படி செய்தால் சப்பாத்தி புசுபுசுவென இரு விரல்களில் பிரிக்க முடியும்.
சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
உப்பு
சர்க்கரை
நெய்
வெந்நீர்
இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். மாவை வெந்நீரில் பிசைந்தால்தான் நன்றாக இருக்கும். பச்சை தண்ணீரில் பிசைந்தால் மாவு விரைப்புத்தன்மைக்கு போய்விடும். பிறகு சாஃப்ட்டாக வராது. சப்பாத்தி இன்னும் சாஃப்ட்டாக வர வேண்டும் என்றால் ஒரு சிறிய வாழைப்பழத்தை மிக்ஸியில் அரைத்து மாவில் சேர்த்து பிசைய வேண்டும்.
நெய், சர்க்கரை, உப்பு, வெந்நீர், வாழைப்பழம் ஆகிய 5 பொருட்களையும் கோதுமை மாவுடன் சேர்த்து பிசையும் போது சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். தண்ணீர் ஊற்றும் போது மொத்தமாக ஊற்றிவிடக் கூடாது. சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசைய வேண்டும். கைகளில் ஒட்டாத அளவுக்கு வந்ததும் மாவை ஒரு துணி போட்டு மூடி வைத்து 10 நிமிடங்களாவது ஊற வேண்டும்.
சப்பாத்தி மாவு ஊறியதும், அதை மீண்டும் ஒரு முறை பிசைந்துவிட்டு சப்பாத்தி இட்டால் நன்றாக வரும். சப்பாத்தியை நெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவை நன்றாக இருக்கும். அது போல் மெல்லியதாக தேய்க்க வேண்டும். இது போன்ற டிப்ஸ்களை பின்பற்றினால் நீங்கள் செய்யும் சப்பாத்தி எத்தனை மணி நேரத்திற்கும் கெட்டு போகாது.












Click it and Unblock the Notifications