எவ்வளவு வெயில் அடித்தாலும்.. அழகு குறையாமல் இருக்கணுமா? கவலை வேண்டாம்.. இதை மட்டும் பண்ணுங்க போதும்
சென்னை: கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த அதீத வெப்பத்தில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
கோடை வெயில் இப்போது நம்மை பாடாய் படுத்தி வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல இடங்களில் வெப்பம் அசால்ட்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டுகிறது. இப்போதே இந்த நிலை என்றால் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

கோடை வெப்பம்: வெப்பம் மிக மோசமாக இருப்பதால் விடுமுறை நாட்களில் கூட வீடுகளிலேயே முடங்கிப் போக வேண்டிய சூழலே இருக்கிறது. இதையும் தாண்டி நாம் வெளியே சென்றாலும் கொஞ்ச தூரம் போவதற்குள்ள நாம் போட்ட மேக்அப் எல்லாம் வீணாகிவிடும். மேலும், அதீத வெப்பத்தில் போனால் அது நமது சருமத்திற்கும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கோடைக் காலத்தில் நமது சருமத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் அடிப்படை என்னவென்றால் வெயில் இருக்கும் போது வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அதீத சூரிய ஒளி சருமத்தை மிக மோசமாகப் பாதிக்கும். இதனால் 11 மணி முதல் 3- 3.30 வரை தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிருங்கள். தமிழக அரசும் கூட இந்த அறிவுறுத்தலை வழங்குவதை மறக்க வேண்டாம். வெளியே செல்வதாக இருந்தால் மாலை நேரம் அதைத் திட்டமிடுங்கள். அதுவே பெஸ்ட்.. சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து தள்ளியே இருங்கள்.
வறுத்தெடுக்கும் வெயில்..கர்ப்பிணிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! குழந்தைகளுக்கு மருத்துவரின் வார்னிங்
சன் ஸ்கிரீன்: சன் ஸ்கிரீன் என்பது சிலருக்கு ஆடம்பரம் போலத் தெரியலாம். ஆனால், இப்போது அடிக்கும் வெயிலுக்கு சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்வது குறித்து யோசித்துக் கூட பார்க்க வேண்டாம். சன் ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருந்தால் சூரிய ஒளி நேரடியாக நமது உடலைத் தாக்கும். அப்படி அது நீண்ட நேரம் தாக்கினால் சரும கேன்சர் வரும் அபாயம் கூட இருக்கிறது. மேலும், சன் ஸ்கிரீனில் SPF என்று ஒன்று இருக்கும். குறைந்தது SPF 30 இருக்கும்படி வாங்குங்கள். அதுவே முழுமையாகப் பாதுகாப்பைத் தரும் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி கூறுகிறது.

தண்ணீர் குடியுங்கள்: அதிகம் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் உடலுக்கும் நல்லது.. சருமத்தையும் பாதுகாக்கும். இயற்கை முறையில் சருமத்தைப் பாதுகாக்க இது ரொம்வே முக்கியம். வெளியில் செல்லும்போது தொடர்ச்சியாகத் தண்ணீரைக் குடியுங்கள்.. ஒரு நாளைக்கு 15-20 கிளாஸ் தண்ணீர் குடித்தால் சருமம் டேன் (tanning) ஆவது தடுக்கப்படும். அதிகளவில் தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
முடிந்தவரை பர்பியூம்களை தவிருங்கள். பர்பியூம்கள் சருமத்தில் படும்போது நமது உடல் சூரிய வெப்பத்தால் சீக்கிரம் டேன் ஆகும். பர்பியூம்களுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் அல்லது நல்ல புத்துணர்ச்சியூட்டும் கிரீம் போன்றவற்றை நாம் பயன்படுத்தலாம்.
சன் கிளாஸ்: அடுத்து சன் கிளாஸ்கள் பயன்படுத்துங்கள். உங்கள் முகத்தில் நேரடியாக வெயில் படுவதை இது தடுக்கும்.. UV பாதுகாப்பு அம்சத்தைக் கொண்ட சன் கிளாஸ்களை அணியுங்கள். வெளியே செல்லும் போது உங்கள் சருமத்தை முழுமையாக மூடம் ஆடைகளை அணிந்து செல்லுங்கள். அவை நமது சருமத்தைப் பாதுகாக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications