வறுத்தெடுக்கும் வெயில்..கர்ப்பிணிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து! குழந்தைகளுக்கு மருத்துவரின் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர், வெயில் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். மேலும் வெளியிடங்களில் வேலை செய்வோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப அலை: இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களில் 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பரவலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. மேலும் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை தமிழகத்திற்கும் பரவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடும் அச்சம்: மேலும் 26 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஐந்து தினங்களில் அடுத்தடுத்து வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் 30ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் இதுவரை மூன்று உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் எச்சரிக்கை: வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் குறித்து பேசியுள்ள மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனுசுயா, ''இந்த கோடையில், நம் மாநிலத்தில், கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது... கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகள், உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். கர்ப்பிணிகள், பருத்தியினாலான மட்டுமே அணிய வேண்டும்.
தவிர்ப்பது அவசியம்: குறிப்பாக அதிக வெப்பநிலை நேரங்களில் கர்ப்பிணிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் .. பிறந்த குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக தோல் பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பு ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தையை ஏசி அல்லது ஏர் கூலர் உள்ள அறைகளில் வைத்து பராமரிக்க வேண்டும்.. அல்லது குளிர்ந்த இடங்களில் குழந்தை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. இளம் குழந்தைகளைப் பொறுத்தவரை, அதிக வெப்பம் உள்ள நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதைத் தவிர்ப்பது அவசியம் என எச்சரித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications