கருவளைய பிரச்சனை கடுப்பு ஏத்துதா.. இதை மட்டும் செய்யுங்க போதும்.. முகம் பளபளக்கும்! ரொம்பவே ஈஸி
முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கப் பல எளிய வழிமுறைகள் உள்ளன.
டெல்லி: முகத்தை நாம் பொலிவுடன் வைத்திருக்கப் பல வழிமுறைகளைப் பின்பற்றுவோம். அதில் சில வழிமுறைகள் நமக்கு கைமேல் பலன் தரும். அப்படி முகத்தை, குறிப்பாகக் கருவளையத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
ஒரு இடத்திற்கு நாம் செல்லும் போது.. பார்க்க நாம் எப்படி இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நாம் எப்படி இருக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். அதை வைத்தே நம் மீது அவர்களுக்கு ஒரு அபிப்பிராயம் உருவாகும்.
எனவே, நாம் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இங்குப் பலருக்கும் முகத்தில் கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும். அதை மிக ஈஸியாக நம்மால் போக்க முடியும். அது குறித்துப் பார்க்கலாம்.

கருவளையம்
தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், அதிக நேரம் டிவி பார்ப்பது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படும்.. அதேபோல வயது முதிர்வு, உணவு அலர்ஜி காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது.. கருவளையம் யாருடைய முகத்தில் இருந்தாலும் அது ஒருவரின் அழகைக் குலைத்துவிடும். முகத்தைப் பார்த்தாலே சோர்வாக இருப்பது போல இருக்கும். இதன் காரணமாகவே கருவளையம் அனைவருக்கும் மனஅழுத்தத்தையே தரும்.. ஆனால், அதைச் செய்வது ரொம்பவே ஈஸி. எப்படி என்று பார்க்கலாம்.

எச்சரிக்கை தேவை
கண்களுக்குக் கீழே உள்ள தோல் மிகவும் சென்சிடிவான ஒன்றாகும். மேலும், மென்மையாக இருக்கும். எனவே, அந்தப் பகுதியைக் கவனமாகவும் கூடுதல் எச்சரிக்கையுடனும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.. மேக் அப் மூலம் கருவளையத்தை மறைப்பதைக் காட்டிலும் குறிப்பிட்ட சில விஷயங்களைச் செய்தால் கருவளையத்தை ஈஸியாக இல்லாமல் செய்ய முடியும். நமது சருமத்தில் ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை வைத்திருக்க வைட்டமின் முக்கியமானது..

வைட்டமின் இ
இது நமக்கு மென்மையான மற்றும் பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது. குறிப்பாக வைட்டமின் இ தோல் துளைகளை இறுக்கி.. சீக்கிரம் வயதாவதைத் தடுக்கிறது. வைட்டமின் இ ஒரு antioxidant ஆகும்.. இது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. கருவளையத்தைக் குணப்படுத்தவும் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும் வைட்டமின் இ எந்தளவுக்கு உதவுகிறது என்பதைக் கண்டறியப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

ஜெல்கள்
அதில் 2 சதவிகிதம் பைட்டோனாடியோன், 0.1 சதவிகிதம் ரெட்டினோல் மற்றும் 0.1 சதவிகிதம் வைட்டமின்கள் சி மற்றும் இ ஆகியவற்றைக் கொண்ட ஜெல், கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையம், இமைகளின் சுருக்கங்களைக் குறைக்கப் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. வைட்டமின் இ நமது சருமத்திற்கான சூப்பர்ஃபுட்டாகவே இருக்கிறது. இது நமது தோல்களில் பல அதிசயங்களைச் செய்கிறது. மேலும், தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

எண்ணெய்
வைட்டமின் இ கொண்ட காப்ஸ்யூல்கள் அனைத்து மருந்துக் கடைகளிலும் எளிதாகக் கிடைக்கும்.. எங்குத் தேவையோ அங்கு நேரடியாக இதை அப்ளை செய்யலாம்.. இது செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. வைட்டமின் இ கூட மருந்துக் கடைகளில் நமக்கு எளிதாகக் கிடைக்கும்.. கருவளையங்களைப் போக்க இயற்கையான வழியாகும். வைட்டமின் இ நிரம்பிய எண்ணெய்யைப் பாதாம் எண்ணெய்யுடன் இணைத்து அப்ளை செய்தால் அது கருவளையங்களைக் குறைக்கும்.. மேலும் முகத்தில் நல்ல பொலிவைத் தரும்.

க்ரீம்கள்
அதேபோல வைட்டமின் இ நிறைந்த க்ரீம்களை கூட நாம் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இது சூரிய ஒளி பாதிப்பை வெகுவாக குறைக்கின்றனர். வைட்டமின் இ கிரீம் எப்போதும் எந்த நறுமணமும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், அதன் முழு நன்மைகள் கிடைக்கத் தாராளமாக அதை நாம் அப்ளை செய்ய வேண்டும். இதுபோன்ற எளிய ஸ்டெப்ஸ்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் கருவளையத்தை நம்மால் நீக்க முடியும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பெண்களுக்கு இஞ்சி தரும் 5 மேஜிக் நன்மைகள்! மாதவிடாய் வலி முதல் செரிமானம் வரை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications