சுய இன்பம் பழக்கத்தை நிறுத்த 9 சிம்பிள் வழிகள்! "பேராண்டிகளா" இதை மிஸ் பண்ணாதீங்க, வருத்தப்படுவீங்க!
சென்னை: ஆண்களில் பலர் சுய இன்பத்திற்கு அடிமையாக இருப்பார்கள். சில மருத்துவர்கள் இது நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், சில மருத்துவர்கள் 3 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை சுய இன்பம் செய்வது நல்லது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் சுய இன்பம் அடிமைத்தனம் என்பது ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 3 அல்லது 4 வரை செய்பவர்களை குறிக்கிறது. அளவுக்கு மிஞ்சிய இந்த பழக்கம் உடல், மனது, பிற சமூக பழக்க வழக்கம் என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைத்து டாக்டர்களும் ஏற்கிறார்கள்.

சிலருக்கு திருமணமான பிறகும் சுய இன்ப பழக்கம் உள்ளதாம். இது இல்லற வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள ஹெல்த் நிபுணர்கள் கூறும் டிப்ஸ் இதோ:
தூண்டுதல்களை அறியவும்: உங்களை சுயஇன்பத்திற்கு அழைக்கும் சூழ்நிலைகள், எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகள் எது என கண்டறியவும். உங்கள் தூண்டுதல்களை தெரிந்துகொண்டால் அதை தவிர்ப்பதும் எளிது.
பிஸியாக இருங்கள்: சுயஇன்பத்தில் இருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, புத்தகங்களைப் படிப்பது, நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது அல்லது புதிய விஷயங்களை நாடிச் செல்லுங்கள். உங்களை பிஸியாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். ஒரே இடத்தில் தனிமையாக இருக்க உங்களை அனுமதிக்காதீர்கள். சுய இன்பம் செய்யும் தூண்டுதல் தானாகவே வந்துவிடும்.
வழக்கத்தை உருவாக்கவும்: சலிப்புக்கு ஆளாகாத தினசரி பழக்க வழக்கத்தை உருவாக்குங்கள். சுயஇன்பம் பற்றிய எண்ணங்களுக்கு நேரம் கொடுத்துவிடாதீர்கள். ஆக்கப்பூர்வ விஷயங்களில் பிஸியாக இருப்பதை உறுதி செய்யவும்.
ஆபாச படங்களை தவிர்க்கவும்: ஆபாசப் படங்கள் பெரும்பாலும் சுயஇன்ப ஆசையைத் தூண்டுகின்றன. இதுதான் முக்கியமான குற்றவாளி என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆபாச வலைத்தளங்களுக்கு ஃபில்டர் போட்டு தடுக்க டெக்னாலஜியில் வழி உள்ளது. குறிப்பிட்ட சமூக ஊடகத் தளங்களில் பெண்கள் அரைகுறை ஆடைகளோடு வருகிறார்கள் அது உங்களை தூண்டுவதாக நினைத்தால் அந்த ஆப்களை டெலிட் செய்யவும், அல்லது லாக் செய்யவும்.
சுய ஒழுக்க பயிற்சி: சுயஇன்பத்தில் ஈடுபடாமல் இருக்க சுய ஒழுக்கத்தையும் மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏன் நிறுத்த விரும்புகிறீர்கள் மற்றும் உத்வேகத்துடன் இருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணங்களை உங்களுக்கு நீங்களே அவ்வப்போது நினைவூட்டுங்கள். இதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படலாம், ஆனால் விடாமுயற்சியுடன், முயன்றால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: வழக்கமான உடற்பயிற்சி, சத்தான உணவை உண்ணுதல் மற்றும் போதுமான தூக்கத்தை உறுதி செய்யவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும். சீரான வாழ்க்கை முறை உங்கள் பாலியல் ஆசைகளை ஒழுங்குபடுத்தவும், சுயஇன்பம் செய்ய விரும்புவதை குறைக்கவும் உதவும். இரவு சீக்கிரமாக தூங்குவது இதற்கு நல்ல பலன் தரும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சீராக்க வழிகளைக் கண்டறியவும், ஏனெனில் இவை பெரும்பாலும் சுயஇன்ப பழக்கத்திற்கு தூண்டும். ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா அல்லது நினைவாற்றல் பயிற்சிகள் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கைகொடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் ஒரு அருமருந்தாகும்.
நேர்மறையான செயல்பாடு: உங்களைப் பற்றி ஒரு நேர்மறையான சுய-பிம்பத்தை உருவாக்குவது இதற்கு உதவும். சுய திருப்திக்காக சுயஇன்பத்தை நம்புவதைக் குறைக்க உதவும். நம்மை யாரும் தப்பாக நினைக்க கூடாது என்ற எண்ணம் உங்களை நீங்களே கட்டுப்படுத்த உதவும். எப்படியும் இருக்கலாம் யார் என்ன நினைத்தால் என்ன என்ற நினைப்பு உங்களை புதைகுழியில் தள்ளும்.
மருத்துவர்: சுயஇன்பம் செய்வதை நிறுத்துவதற்கான உங்கள் முயற்சி சரிவர பலனளிக்காவிட்டால் டாக்டரை அணுகவும். மனநல மருத்துவரை அணுகுவது சரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications