இன்புளூயன்சா ப்ளூ..உடல் வலி,இருமலுக்கு சித்தாவில் தீர்வு..டாக்டர்.ஒய்.ஆர்.மானக்சா - எக்ஸ்குளூசிவ்
இன்புளூயன்சா ப்ளூ காய்ச்சல், தொடர் இருமலையும் சித்த மருத்துவத்தின் மூலம் எளிமையாக குணப்படுத்தலாம் என்று சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா கூறியுள்ளார்.
திருநெல்வேலி: நாடு முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மக்கள் மீண்டும் தனிமையில் முடங்கத் தொடங்கியுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு, உடல் வலி, தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும் நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காகவும் பிரத்யேக ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.
இன்புளூயன்சா வைரஸ்கள்A,B,C,D என்று நான்கு வகைப்படும், இவற்றில் இன்புளூயன்சா ஏ மற்றும் சி வைரஸ்கள் புளூ வகை சீசனல் காய்ச்சலை ஏற்படுத்துபவை.இன்புளூயன்சா ஏ வகை வைரஸ்கள் அதனுடைய இரு புரதத்தின் அடிப்படையில் (ஹெமக்குளூட்டினின்-H மற்றும் நியுராமினிடேஸ் -N) இரு பிரிவுகளாக பிரிகிறது.
இவற்றில் H1 மீண்டும் 18 வகைகளாக பிரிகிறது,N1 - 11 வகைகளாக பிரிகிறது.இவற்றில் சாதாரண புளூ வகை காய்ச்சலான H1 N1 மற்றும் H3 N2 இவை அடங்கும்.இவ்வகை வைரஸ் காய்ச்சல் கள் பொதுவாக காலநிலை மாற்றத்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைப்பாட்டாலும் ஒரு நபரிடத்தில் இருந்து இன்னொரு நபருக்கு, இருமல், தும்மல், இவை மூலம் வேகமாக பரவுகிறது.

இன்புளூயன்சா அறிகுறிகள்
குளிர் காய்ச்சல், பசியின்மை, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர்வடிதல், தும்மல், தலைவலி, தொண்டையில் வலி, தொண்டை கரகரப்பு, இருமல், உடல் முழுவதும் தசை தசையாக கடுமையான வலி, சில நேரங்களில் வாந்தி அல்லது பேதி, உடல் களைப்பு,சோர்வு, போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும். தண்ணீர் மாறுபாட்டினால், காலநிலை மாறுபாட்டினாலும் சாதாரணமாக வருகின்ற புளூ காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் அற்புதமான தீர்வினை தருகிறது.

சித்த மருத்துவத்தில் தீர்வு
நிலவேம்பு கசாயம்: பெரியவர்கள் -60 மிலி இருவேளை. சிறுவர்கள்-15 -30 மிலி இருவேளை, குழந்தைகள் -10-15 மிலி வீதம் ஏழு நாட்கள் எடுக்க வேண்டும். திரிகடுகு சூரணம்-1 கிராம்,லிங்கச் செந்தூரம்-100-200 மிகி, சிவனார் அமிர்தம்-200 மிகி இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

தொண்டை வலி
தொண்டை வலி, கரகரப்பு,குரற்கம்மல் இருந்தால் தாளிசாதி வடகம்-1-2 மாத்திரை மூன்று வேளை கடித்து சாப்பிட வேண்டும், ஒரு டம்ளர் வெந்நீர் அருந்துவது நல்லது. தலைவலி இருந்தால் நீர்க்கோவை மாத்திரையை வெந்நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் போட வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு -5 முதல் 10 மிலி, இரண்டு முதல் மூன்று வேளை குடிக்க வேண்டும்.

தலைபாரம், மூக்கடைப்பு
பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். முட்டையை அரை வேக்காட்டாக்கி அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். தலை பாரம், மூக்கடைப்பு இருந்தால் நொச்சி இலை அல்லது மஞ்சள் வைத்து ஆவி பிடிக்க வேண்டும். குடிப்பதற்கு, குளிப்பதற்கு இள வெது வெதுப்பான வெந்நீரை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது,சானிடைசர் பயன்படுத்துவது நல்லது. காய்ச்சல் வந்தவர்கள் கட்டாயம் தங்களை மூன்று நாட்கள் தனிமைப் படுத்துவது நல்லது, இதனால் அவர்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும், மற்றவர்களுக்கு பரவுவதும் தடுக்கப் படும்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்
கிராம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். கிராம்பு-2 ஏலம்- 2 இலவங்கப்பட்டை- 1, அதிமதுரம் சிறு துண்டு, சுக்கு சிறு துண்டு, சிற்றரத்தை சிறு துண்டு, மிளகு 10, மஞ்சள் சிறு துண்டு, இவைகளை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்த்து வடிகட்டி, அதில் எலுமிச்சைப்பழம் பாதி பிழிந்து, புதினா இலை 2 சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால், உடலுக்கு சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும் இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் உள் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் உடலின் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை நோய் அணுகாதவாறு கேடயமாக பாதுகாக்கும்.இதை காலை, இரவு இருவேளை தினமும் பருகலாம்.

குரல் பாதிப்பு சரியாக
ஆடாதோடை இலை-2, மிளகு -5 இதை பனை வெல்லம்,நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஒன்றுடன் மென்று சாப்பிட வேண்டும். சின்ன வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும். பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இளஞ்சூடான குடிநீர் பனங்கற்கண்டு
சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும். வெந்நீரில் உப்பு சேர்த்து வாய், தொண்டையை கொப்பளிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் -1- 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க குரல் கரகரப்பு சரியாகும்.

தேனும் துளசி இலையும்
துளசி இலைச்சாறு, கற்பூரவல்லி இலைச் சாறு, இவைகளை தேனுடன் கலந்து காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். ஆடாதோடை மணப்பாகு -5-10 மிலி, காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். தாளிசாதி சூரணம் -1 கிராம்,பவள பற்பம் -200 மிகி, கஸ்தூரி கருப்பு -200 மிகி தேன் அல்லது வெந்நீரில் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

வேகவைத்த முட்டை மிளகு சீரகம்
கண்டங்கத்திரி லேகியம் அல்லது தூதுவளை லேகியம் - 1 டீஸ்பூன் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். குடிப்பதற்கு வெந்நீர் எடுத்து கொள்ள வேண்டும். பாலில், மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். முட்டையை அரை வேக்காட்டாக்கி அதனுடன் மிளகு, சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட வேண்டும்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications