தொப்பையை குறைக்க "இதை" மட்டும் பண்ணாதீங்க! மாரடைப்பு வர 91% வாய்ப்பு இருக்காம்- புது ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: உடல் எடை குறைப்பிற்கு இப்போது பலரும் இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் முறையைப் பின்பற்றும் நிலையில், இது குறித்து சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீனக் காலத்தில் நாம் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப் பல மணி நேரம் நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைப்பதே இப்போது இளைஞர்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. இதற்குப் பொதுமக்கள் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றுகிறார்கள்.
பாஸ்டிங்: அப்படி எடை குறைப்போர் பலரும் பின்பற்றுவது இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் (intermittent fasting) என்ற முறையைத் தான். இந்த முறையில் எடை குறைப்போர் 12 அல்லது 16 மணி நேரத்திற்கு எதையும் சாப்பிட மாட்டார்கள். உதாரணமாகக் காலை 10 மணி முதல் உணவை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் மாலை 6 மணி அன்றைய நாளின் கடைசி உணவைச் சாப்பிடுவார்கள். அதன் பிறகு இரவு எந்தவொரு உணவையும் சாப்பிட மாட்டார்கள்.
16 மணி நேர இடைவெளிக்குப் பிறகு மறுநாள் காலை தான் அடுத்த வேலை உணவைச் சாப்பிடுவார்கள். இப்படி நீண்ட நேரம் சாப்பிடாமல் பாஸ்டிங் இருப்பது உடல் எடையைக் குறைக்கப் பலரும் பின்பற்றும் ஒரு யுக்தியாகும். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதில் இருக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிகாகோவில் திங்கட்கிழமை இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.
ஆபத்து: அதில் உணவு நேரத்தைத் தினசரி எட்டு மணிநேரமாகக் குறைப்பது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தில் 91% வரை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வு முடிவை வெளியிடாமல் abstract எனப்படும் சுருக்கத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேநேரம் இந்த ஆய்வை பல ஆய்வாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆய்வு முறையில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கீத் ஃப்ரைன், "இதுபோல இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரியை குறைக்க முடியும். இதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். அது குறித்து நமக்கு நீண்டகால ஆய்வுகள் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த ஆய்வை முழுமையாக ஏற்க முடியாது. அதில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை" என்றார்.
ஏற்க மறுப்பு: ஷாங்காய் ஜியாவ் டோங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் விக்டர் ஜாங் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் அமெரிக்கத் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை ஆய்வில் சேர்க்கப்பட்ட 20,000 பேரின் டேட்டாவை ஆய்வு செய்தனர். அவர்களில் இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் முறையைப் பாலோ செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அவர் உயிரிழப்புக்கான காரணம், நேரத்தை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அதாவது பொதுமக்கள் இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் குறித்த அளித்த தகவல்களை வைத்தே இந்த ஆய்வை செய்துள்ளனர். இது நேரடியாக மக்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட ஆய்வாக இல்லாமல் ஏற்கனவே இருக்கும் டேட்டாவை பகுப்பாய்வு செய்த ஆய்வு என்பதாலேயே பலரும் இது குறித்து சந்தேகம் கிளப்புகிறார்கள். மேலும், இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் குறித்துச் சொன்னவர்கள் அதை எத்தனை காலம் பாலோ செய்தனர் என்பது குறித்த டேட்டாவும் அதில் இல்லையாம். எனவே இதை முழுமையான ஆய்வாகக் கருத முடியாது என்றும் பலரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications