உங்க வீட்டிலுள்ள நான்-ஸ்டிக் பாத்திரம் கேன்சரை ஏற்படுத்துமா? தப்பி தவறியும் "இதை" செய்யாதீங்க
சென்னை: இந்த காலத்தில் நம்மில் பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. இந்த நான் ஸ்டிக் பாத்திரங்கள் உண்மையில் பாதுகாப்பானது தானா.. இதனால் கேன்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நகரங்களில் இப்போது நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இதில் சில சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நான் ஸ்டிக் பாத்திரங்கள்
அதாவது முன்பெல்லாம் நான் ஸ்டிக் பாத்திரங்களில் டெஃப்ளான் கோடிங் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் PFOA எனப்படும் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் இருக்கும். இந்த PFOAஐ நமது உடலில் மிக்ஸ ஆனால் அது கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் நிறுவனங்களே நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இதன் பயன்பாட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் இன்னுமே இதைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, ஒரு முறை இரண்டு முறை இதை செக் செய்து கொள்ளுங்கள்.
தற்போதைய நான்-ஸ்டிக் பாத்திரங்களில் PFOAக்கு பதிலாக Polytetrafluoroethylene (PTFE) பயன்படுத்துகிறார்கள். இதை நாம் ஓவர்ஹீட் செய்யும்போது சில சிக்கல்கள் உருவாகும். 500°F (260°C)க்கும் அதிகமான வெப்பத்திற்குப் போகும் போது அது நமக்குச் சிக்கலை உருவாக்கலாம். அப்போது மூச்சு திணறல் தொடங்கிப் பல சிக்கல் உருவாகும். மேலும், "டெல்ஃபான் ஃப்ளூ" என்ற சிக்கலும் ஏற்படும். இது கேன்சரை போல அபாயமானது இல்லை என்றாலும் இந்த சிக்கல் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டியது
இதில் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது அதன் அடிப்பாகம் எப்படி இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். அதன் அடிப்பகுதியில் கீறல் உட்பட எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. இதனால் தாளிக்க அல்லது தோசை என்றால் திருப்பி போடக் கண்டிப்பாக மரத்தில் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் கீறல்கள் குறையும்.
இந்த தப்பை செய்யாதீங்க
நாம் எவ்வளவு தான் பார்த்துப் பார்த்து பயன்படுத்தினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கீழே அடிப்புறம் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டு புதிய பாத்திரத்தை வாங்குங்கள். டேமேஜ் ஆன நான் ஸ்டிக் பாத்திரங்களை வைத்துத் தொடர்ந்து சமைக்கும் போது அது நமது உடலுக்கு ஏகப்பட்ட பாதிப்புகளை உருவாக்கும். எனவே, இந்த ஒரு தப்பை மட்டும் செய்ய வேண்டாம்.
டேஸ்ட் கூட மாறும்
மேலும், அடிக்கடி சமையல் செய்வோருக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். அதாவது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போது அதன் டேஸ்ட் மாறுபடும். எதனால் இதுபோல டேஸ்ட் மாறுகிறது என்பதைச் சொல்லத் தெரியவில்லை என்றாலும் பலரும் இதுபோல டேஸ்ட் மாறுவது உணர்ந்து இருப்பார்கள். இதுவும் ஒரு சிக்கல்.
அச்சம் வேண்டாம்
எண்ணெய் துளியும் பயன்படுத்தாமல் சமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் முதலில் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், எண்ணெய்யை பார்த்து ஏதோ பாம்பை பார்ப்பது போல இவ்வளவு தூரம் அஞ்சி ஓட தேவையில்லை. அளவுக்கு மீறினால் மட்டுமே எண்ணெய் ஆபத்து. எனவே, இவ்வளவு தூரம் பார்த்துப் பார்த்து நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதை விட வழக்கமாகப் பாத்திரங்களையே பயன்படுத்திவிட்டுப் போகலாம்.












Click it and Unblock the Notifications