கற்பூரவள்ளி வாழையில் கொட்டிக்கிடக்கும் அதிக நன்மை.. உடல் எடை குறைக்க உதவும் இலைத்தண்ணீர்.. அற்புதம்
சென்னை: வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பார்கள்.. ஆனால், உடல் எடை குறைய வேண்டுமானால், கற்பூரவள்ளி அதற்கு பேருதவி புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு என்ன காரணம்? கற்பூரவள்ளி வாழையை எப்படி சாப்பிட வேண்டும்?
சராசரியாக 118 கிராம் அளவு கொண்ட நடுத்தர அளவிலான வாழைப்பழம் ஒன்றில், 15 கலோரிகள் மற்றும் 27 கிராம் மாவுச்சத்து உள்ளன.. இது தவிர நார்ச்சத்து 3 கிராம், புரதம் 1 கிராம் என்ற அளவில் இருக்கும். கொழுப்பு சத்து முழுமையாக கிடையாது.

எலும்புகள்: மனிதனின் சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம், ஒரே ஒரு வாழைப்பழத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். எனவே, தினமும் 1 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், வயிறு நிறையும்..
உதாரணத்துக்கு பச்சை வாழைப்பழத்தில், கொழுப்பு எரியும் தன்மை அதிகமாக உள்ளது. ஒரு பச்சை வாழையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தாலே, அன்றைய நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வு காணப்படும். வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிறைந்திருப்பதுடன், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் போதுமான அளவுக்கு உள்ளன.
மாவுச்சத்து: வாழைப்பழத்தில் மிகுதியான மாவுச்சத்து இருக்கிறது. மாவுச்சத்து நம் உடலுக்கு துரிதமான ஆற்றலை தரக்கூடியவை.. எனினும், அளவுக்கு மிகுதியாக வாழைப்பழங்களை சாப்பிடும்போது, நம்முடைய உடலில் மாவுச்சத்து சேமிக்கப்பட்டு அதன் எதிரொலியாக உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது.
ஆனால், வாழைப்பழத்தில், பொட்டாசியம், வைட்டமின் A. B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம் என ஏகப்பட்ட சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. எனவே, எந்த வாழைப்பழத்தையும், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து சாப்பிடும்போது, உடல் எடை எப்போதுமே அதிகரிக்காது..
கற்பூரவள்ளி: இந்த வாழைப்பழங்களில் கற்பூரவள்ளியை குறிப்பிட்டு சொல்லலாம்.. உடல் எடையை குறைக்க இந்த பழத்தினை தாராளமாக பயன்படுத்தலாம்.. காரணம், கற்பூரவள்ளி பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளதுடன், ஜீரண சக்தியை பெருக்குகிறது.. கால்சியம் அதாவது, மேங்கனீஷ், மெக்னிஷியம் அதிகமாக உள்ளதுடன், எலும்புகளுக்கு உறுதியை தருகிறது. உடல் எடை குறைப்பவர்கள் என்றில்லாமல், நேரமின்மை காரணமாகவும், பலர் காலை உணவை தவிர்த்து விடுவார்கள்.
அதுபோன்ற சூழலில், ஒரேயொரு கற்பூரவள்ளியை, காலையில் சாப்பிட்டாலே, அன்றைய நாளுக்கான ஆற்றலை பெறலாம்.. இதனால் சோர்வும், மன அழுத்தமும் நெருங்காமல் இருக்கும்,
எளிய மருந்து: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள், திராட்சை பழம், எலுமிச்சம் பழம், கொய்யாக்காய் போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.. கலோரிகள் குறைவாக உள்ள கொய்யாவில், புரோட்டீன்கள், வைட்டமின் B6, C, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளன. அல்லது கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம், நீர்ச்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கொய்யா, உடல் எடை குறைப்போருக்கு வாழையை போன்ற எளிய மருந்தாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications