குப்பையில் கிடக்கும் குப்பைமேனி இலையில் கொட்டி கிடக்கும் ஆரோக்கியம்.. அந்த தைலம் இயற்கை வரப்பிரசாதம்
சென்னை: குப்பை மேனி இலைகளை யாரும் விதையிட்டு, தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில்லை. சாலையோரங்களில், வயல்வெளிகளில், புதர்களில் அதுவாகவே முளைத்து கிடக்கும்.. குப்பையில் கிடந்தாலும், பல்வேறு நோய்களை போக்கக்கூடியது.. சரும நோய்களை நெருங்க விடாத குப்பை மேனியிலிருந்து ஏராளமான மருந்துகள் தயாராகின்றன.. குப்பைமேனி இலைகளை எப்படி பயன்படுத்தலாம்? இதன் எண்ணெய்யின் பயன்கள் என்னென்ன? இவைகளை பற்றி பார்க்கலாம்.
குப்பை மேனியில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்டுகள், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன..

எனவே, பேசிலஸ் சப்டிலிஸ், எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து போராடும் தன்மை இந்த குப்பைமேனிக்கு உண்டு..
ஆண்டிபயாடிக் மஞ்சள்
நம்முடைய சருமத்தில், வைரஸ், பூஞ்சைத் தொற்றுகளையும் நீக்கும் சக்தி குப்பைமேனி இலைகளுக்கு உண்டு என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
எனவேதான், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல், போன்ற பாதிப்புகள் இருந்தால், சிறிது கல் உப்பினை குப்பைமேனியில் கலந்து விழுதாக அரைத்து உடம்பில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்துவிடலாம்.. இதனால், சரும நோய் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் பொலிவு பெறும்.. புண்கள், காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட்டால், குப்பைமேனி இலையில் மஞ்சளை அரைத்து பற்று போடலாம்.
சரும வியாதிகள்
அல்லது வேப்பிலை கொழுந்து, குப்பை மேனி இலைகளுடன், விரலி மஞ்சள், கல் உப்பு, எலுமிச்சை சாறு விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, அதில் 2, 3 சொட்டு தேங்காய் எண்ணெய்யை சேர்த்து, உடலில் பூசலாம்.. முதலில் உடம்பில் பூசும்போது எரிச்சலை தந்தாலும், பிறகு நிவாரணம் கிடைக்கும்..
நரம்புகள் வலுவின்றி இருந்தாலோ அல்லது உடல் வலி, கால் வலி இருந்தாலோ, குப்பைமேனியை இலைகளை மருந்தாக தேய்க்கலாம்.. சளி, தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் போன்ற பிரச்சனை இருந்தால், குப்பைமேனி இலையின் சாற்றில், சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பூசினால் பலன் கிடைக்கும்.
சொத்தை பல் இருந்தால், பற்களில் வலி இருந்தால், குப்பைமேனி இலையை நசுக்க சொத்தை பற்களின் மீது வைக்கலாம்..
குப்பைமேனி எண்ணெய்
குப்பைமேனி இலைகளிலிருந்து எண்ணெய் எடுத்து, அதன் மூலமாகவும் உடலில் சில பிரச்சனைகளை தீர்க்கலாம்.. குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வாணலில் ஊற்றி, அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் ஊற்றி, இந்த 2 எண்ணெய்யுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.. பிறகு 2 நாள் அப்படியே விட்டுவிடவேண்டும்.. இறுதியில், வாணலில் தேங்கியுள்ள வெறும் எண்ணெய்யை வடிகட்டி எடுத்து, அனைத்து விதமான சரும வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம்.
வெறும் வெளிப்புற தொந்தரவுகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளுக்குள்ளும் மருந்தாக குப்பைமேனியை சாப்பிடலாம்.. இதன் இலையில் 2 மிளகை சேர்த்து அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிப்பாகும்..
வயிற்றிலுள்ள நச்சுக்கள்
குடல் புண்கள்: குடல் புண்களுக்கு இந்த குப்பை மேனி இலைகள் சிறந்த மருந்தாகும்..இந்த இலையின் சாற்றில் 30 மில்லி தேன் கலந்து சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள குடல்புழுக்கள், நச்சுக்கள் வெளியேறும்.. இந்த சாறு, கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் நல்லது..
குப்பைமேனி இலையில் செய்யப்படும் கசாயம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகின்றன.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த மூலிகையை சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியம்!!












Click it and Unblock the Notifications