நள்ளிரவில் செல்போன் பார்க்கும் ஆண்களே உஷார்.. மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படுமாம்! மருத்துவர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்றைய நவீன உலகில் குழந்தையின்மை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதற்கிடையே இரவு நேரங்களில் ஆண்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த நவீன காலத்தில் குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் செலவுகளைச் சமாளிக்க முடியும். அதிலும் இப்போது பல நிறுவனங்களில் ஷிப்ட் என்பது சாதாரணமாகிவிட்டது.

mobile

மலட்டுத்தன்மை: இதனால் கணவன்- மனைவி ஒன்றாக இருக்கும் நேரமே வெகுவாக குறைந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் குழந்தையின்மை என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. தற்போது சமூகத்தில் சராசரியாக 15% முதல் 20% வரை குழந்தையின்மை பிரச்சினை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இதற்கு 20% முதல் 40% வரை ஆண்களே காரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது ஆண்களிடையே தான் மலட்டுத்தன்மை அதிகமாக இருக்கிறதாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில், செல்போனை இரவு அதிக நேரம் யூஸ் செய்யும் போது, அதில் இருந்து வெளியாகும் நீல லைட் கூட ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மருத்துவர் வார்னிங்: இது தொடர்பாக டாக்டர் ஸ்வேதா கோஸ்வாமி கூறுகையில், "செல்போன், லேப்டாப், டேப்லெட்டுகள் ஆகியவற்றில் இருந்து வெளியாகும் லைட் நமது தூக்கத்தைப் பாதிப்பது மட்டுமின்றி விந்தணுக்களையும் பாதிக்கிறது. விந்தணுக்கள் சரியாக நீந்தி அதன் இலக்கை அடைவதை இது பாதிக்கிறது. இதனால் ஆண்களிடையே மலட்டுத்தன்மை விகிதம் உயர்கிறது..

செல்போன் லைட்டில் பல்வேறு வண்ணங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்தும். உதாரணமாக மாலை அல்லது இரவில் செல்போனில் இருந்து வரும் நீல கலர் உடலின் மெலடோனின் சுரப்பைக் குறைக்கிறது. தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மானில் ஏற்படும் சிக்கலை உடலைக் கடுமையாகப் பாதிக்கும். தூக்கத்தின் தரம் மற்றும் அளவை இது பாதிக்கிறது. கருவுறுதல் சிக்கலை ஏற்படுத்துவதில் இதுவும் ஒரு முக்கிய காரணம்" என்கிறார்.

டிஎன்ஏ: அதேபோல செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு டிஎன்ஏவை கூட பாதிக்கலாம் என எச்சரிக்கிறார் மருத்துவர் ஷோபா குப்தா.. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதுபோன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஒரு நபரின் டிஎன்ஏவை பாதிக்கிறது. இதனால் செல்கள் தானாகவே குணமடையும் திறனை இழக்கத் தொடங்குகின்றன. இந்த கதிர்வீச்சு விந்தணுக்கள் மற்றும் முட்டை செல்களை அடையும் போது.. ​​அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி கருக்கலைப்புக்கும் காரணமாகிறது" என்று எச்சரிக்கிறார்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி: அதற்காக செல்போனையே யூஸ் செய்யக்கூடாதா எனக் கேட்டால்.. அப்படி இல்லை. இந்த காலத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், இரவு நேரங்களில் குறிப்பாகப் படுக்கைக்குப் போன பிறகு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் அதுவும் பெரியளவில் உதவும். குறிப்பாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை முழுமையாகக் கைவிட்டு, தினசரி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலே இந்த பிரச்சினையைப் பெரியளவில் தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+