ஆபத்து.. கிச்சனில் இந்த 4 பொருள் இருக்கா? உடனே தூர வீசுங்க.. உணவையே விஷமாக்கி விடுமாம்! இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஆனால் நம் வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்கள் உள்பட உணவு கையாள பயன்படுத்தப்படும் 4 முக்கிய பொருட்களே நம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுத்தன்மையை உமிழ்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் உண்மை. அதனால் முதலில் கிச்சனில் உள்ள அந்த 4 பொருட்களின் பயன்பாட்டை உடனடியாக கைவிட ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார்.

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஹெல்த்தான உணவை சாப்பிடுவதாக நம்புகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் சில உணவுகள் நமக்கு கேடுவிளைவிப்பதை அறியாமலே இருப்பது தான். இதனால் சுகாதாரமான அதேநேரத்தில் சத்தமான உணவுகளை கண்டறிந்து சாப்பிடுவது அவசியமாகும்.

These 4 toxic items in your kitchen? Immediately You Need To Throw out, here list

இன்றைய சூழலில் பலரும் ஓட்டல் உணவுகளை எடுத்து கொள்கின்றனர். இதற்கு நேரமின்மை உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் சிலர் ஓட்டல் உணவுகளை தவிர்க்கின்றனர். எங்கு சென்றால் பெரும்பாலான சமயங்களில் ஓட்டல் உணவுகளை புறம்தள்ளி வீட்டில் சமைக்கும் உணவுகளையே சுவைக்கின்றனர்.

ஓட்டல் உணவுகளை தவிர்ப்பது ஏன்? என காரணம் கேட்டால் ஓட்டல் உணவு தரமானதாக இருக்காது, சுவை கூட்டிகள் சேர்க்கப்படுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்படுகிறது என அடுக்கடுக்கான புகார்களை அடுக்குவார்கள். அதோடு இதுபோன்ற காரணங்களால் தான் ஓட்டல் உணவுகளை சாப்பிடுவது இல்லை. மாறாக வீட்டில் இருந்தே உணவு சமைத்து கொண்டு வருவதாக பெருமைப்பட கூறுவதை நாம் கேட்டு இருப்போம்.

ஆனால் இன்று நமக்கே தெரியாமல் நாம் நச்சுத்தன்மையுள்ள உணவுகளை சுவைக்கிறோம். குறிப்பாக வீட்டு கிச்சனில் சமைக்க பயன்படுத்தும் பொருட்கள், உணவுகளை கையாள பயன்படுத்தப்படும் பொருட்களே உணவை நச்சாக்குகின்றன என்றால் அது நமக்கு அதிர்ச்சியோடு, சந்தேகங்கள் தான் ஏற்படும். ஆனால் இது முற்றிலும் உண்மை என்றே ஊட்டசத்து நிபுணர் கூறியுள்ளார்.

These 4 toxic items in your kitchen? Immediately You Need To Throw out, here list

பொதுவாக உணவு சமைப்பதற்கும், உணவு சேமிப்பதற்கும் நாம் பல்வேறு விதமான பாத்திரங்களை கிச்சனில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பாத்திரங்களில் சில மிகவும் நச்சுத்தன்மையுள்ளவை என்றும் உடனே அதனை அகற்ற வேண்டும் எனவும் ஜூஹி கபூர் என்ற ஊட்டச்சத்து நிபுணர் தனத இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.

மேலும் வீட்டு கிச்சனில் உணவுகளை நச்சாக்கும் வகையில் உள்ள பொருட்களை அவர் பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் பிளாஸ்டிக் டிபன்கள் உள்ளன. அதாவது தற்போது அனைவரின் வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்களை டிபன்களாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இது உடலுக்கு கேடானது. சூடான உணவு அல்லது குளிர்ந்த உணவு வைத்தால் பிளாஸ்டிக்கில் வெப்பநிலை மாறி நச்சுவாயு வெளியாகும். இதனால் உணவு நச்சுத்தன்மைக்கு மாறும் என அவர் கூறியுள்ளார்.

These 4 toxic items in your kitchen? Immediately You Need To Throw out, here list

இதில் 2வது இடம் பிடிப்பது அலுமினியம் பாயில் பேப்பர் (Aluminium Foil Paper). அதாவது நீண்டநேரம் உணவு சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்சல் கட்ட நாம் இதனை பயன்படுத்தி வருகிறோம். இந்த வேளையில் அலுமினியம் பேப்பரில் அலுமினிய ரசாயனம் உணவுக்கு இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால் உணவு நச்சாகி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். இதனால் மஸ்லின் துணி அல்லது பேப்பரை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

இந்த பட்டியலில் 3வது இடத்தில் Cling or plastic wraps உள்ளன. இதில் பாலிமர்கள், ரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தும்போது ரசாயனங்கள் உணவில் சேர வாய்ப்புள்ளது. இதனால் இதனையும் தவிர்ப்பது நல்லது. மேலும் 4வதாக டெப்லான் கோட்டிங் பாத்திரங்கள் உள்ளன. இவை சமையலுக்கு ஏற்றது அல்ல. இதனை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக இரும்பு அல்லது மண் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+