முன்னூறு நோய் தீர்க்கும் முருங்கை.. இரும்புச்சத்து தரும் முருங்கை விதைகள்.. அதென்ன முருங்கை எண்ணெய்
சென்னை: முருங்கைக்காய்களை மூலநோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா? முருங்கைக்காய்களை குழந்தைகளுக்கு தரலாமா? முருங்கை எண்ணெய் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
முருங்கைக்காயில் சத்துக்கள் நிறைய உள்ளன.. இதிலுள்ள பொட்டாசியச்சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம்.. முருங்கையிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானது. முருங்கையிலுள்ள கால்சியம், பாலைவிட 4 மடங்கு அதிகம். முருங்கையிலுள்ள வைட்டமின் C, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். கீரைகளில் இருப்பதைவிட, முருங்கையில் இரும்புச்சத்துக்கள் அதிகம்.

முருங்கைக்காய்கள்: இத்தனை சத்துக்களும் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு முருங்கைக்காய்களை தவறாமல் உணவில் தர வேண்டும். இதனால் எலும்புகள், பற்கள் வலிமையும். முக்கியமாக முருங்கையின் விதைகளை குழந்தைகளுக்கு தரும்போது, மலக்குடல்களிலுள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். எனவே, இந்த விதைகளை மட்டுமே வைத்து அல்வா, சூப் உள்ளிட்டவைகளை செய்து தரலாம்.
அதேபோல, முருங்கைக்காயை வேக வைத்து, அதிலுள்ள சதைகளை எடுத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்து தரலாம். ஃப்ரைடு ரைஸ்களிலும் முருங்கை விதை விழுதுகளை சேர்த்து தயாரிக்கலாம்.
இரும்புச்சத்து: இதிலுள்ள இரும்புச்சத்து உடலை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கித்தரும். எனவே மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இந்த முருங்கை தவிர்க்க முடியாத ஒன்று. நீர்ச்சத்து நிறைந்த முருங்கைக்காய்கள், உடலில் ஏற்படும் திரவ இழப்பை சீராக்குகிறது.. இதனால் உடலில் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சி கிடைக்கும். அதனால்தான், மூலநோயாளிகளை உணவில் முருங்கையை அதிகம் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கும் இந்த முருங்கைக்காய் சிறந்த உணவு.. நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்க்க வேண்டியது இந்த முருங்கை காய்களைதான்.. இதனால் ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்கிறது.
முருங்கை எண்ணெய்: முருங்கை காய்களிலிருந்து கிடைக்கும் முருங்கை எண்ணெய் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தவை.. முருங்கை மரத்திலேயே காய்களை காயவிட வேண்டும். பிறகு அந்த காய்களை உரித்து எடுக்கப்படும் விதைகளில் உள்ள பருப்பை நன்றாக காயவைத்து செக்கில் ஆட்டி எடுத்தால் முருங்கை எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெய்யில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் E, C, கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது உடலில் உள்ள ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்து போராட செய்கிறது. நம்முடைய உடலிலுள்ள திசுக்கள், சருமம், முடிக்கு தீங்கு விளைவித்து வயதை துரிதப்படுத்துவதால் வயதான தோற்றத்தை அளிக்கிறது.
சருமம் பாதுகாப்பு: முருங்கை எண்ணெய் இந்த ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலை படுத்துவதன் மூலம் உடலில் தோன்றும் சுருக்கங்கள், நிறமி போன்றவற்றின் வெளிப்படை தன்மை தடுக்கப்படுகிறது. முருங்கை எண்ணெய் தலைமுடி வளர்ச்சியிலும், சரும பராமரிப்பில் மிக முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications