அடுத்தடுத்து கர்ப்பத்தை அறிவித்த விஜே பிரியங்கா, நடிகை சமந்தா.. ஒற்றுமையும் வேற்றுமையும்! ரசிகர்கள் சொல்வது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப நாட்களில் சின்னத்திரை - வெள்ளித்திரை ரசிகர்களிடையே அதிகமாக பேசப்படும் இரண்டு பெண்கள் யார் என்றால், அது விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் நடிகை சமந்தா தான். காரணம், இருவரும் தங்களுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்திருப்பதுதான்.

இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு இருவரும் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷம் கொடுத்திருக்கிறது. ஆனால் அதைவிட இப்போது பேசப்படுவது, அந்த கர்ப்ப அறிவிப்புக்கு பிறகு இருவரும் எடுத்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட முடிவுகள் பற்றிதான்.

கர்ப்பத்தை அறிவித்த விஜே பிரியங்கா

ஒருபக்கம், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே, தனது கணவர் வாசி சச்சியுடன் "Mommy" - "Daddy" கேப்புகள் அணிந்து கர்ப்பத்தை அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, அந்த திருமண வாழ்க்கையின் இனிய அடுத்த கட்டத்தை இப்போது தொடங்கியிருக்கிறார். ஆனால், இந்த குட் நியூஸை சொன்ன பிறகும் அவர் வேலைகளில் இருந்து ஒதுங்கிவிடவில்லை.

தொடர்ந்து தனது டிவி நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகள், சமூக வலைதள அப்டேட்கள் என ஆக்டிவாகவே இருக்கிறார். இதனால், "பிரியங்கா கர்ப்பமாக இருந்தும் இவ்வளவு எனர்ஜியோடு வேலை பார்த்துக்கிட்டே இருக்காரே!" என்று ரசிகர்கள் ஆச்சரியமாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

Priyanka Deshpande Samantha

சமந்தா சொன்ன மகிழ்ச்சி செய்தி

மற்றொரு பக்கம், சமந்தா எடுத்த முடிவு முற்றிலும் வேறு. 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில், கர்ப்பமாக இருப்பதை அவர் மிகவும் இயல்பாக பகிர்ந்துகொண்டதோடு, "இப்போ நான் மெட்டர்னிட்டி லீவ் எடுக்கணும்... ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வர்றேன்" என்று சொல்லி சினிமாவில் இருந்து தற்காலிக இடைவெளி எடுக்கப்போவதாக அறிவித்தார். அதாவது, பிரியங்கா போல "வேலை தொடர்கிறேன்" என்ற பாதையை விட, சமந்தா "இப்போ எனக்கு வாழ்க்கையின் இந்த கட்டம்தான் முக்கியம்" என்ற முடிவை எடுத்திருப்பது போல ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

Priyanka Deshpande Samantha

ரசிகர்களின் ஒப்பீடு

இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. "இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம்... ஆனா ஒருத்தர் ஷோவில பிஸி, இன்னொருத்தர் சினிமாவுக்கு பிரேக்" என்ற ஒப்பீடு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. சிலர் இதை ரசித்துப் பேசுகிறார்கள். இன்னும் சிலர், "இது ஒவ்வொருவரின் வாழ்க்கை, உடல்நிலை, வேலை சூழல் எல்லாம் வேறுபடும் விஷயம்" என்று மிகவும் நிதானமாக அணுகுகிறார்கள்.

உண்மையில் பார்த்தால், இந்த ஒப்பீட்டுக்குள் ஒரு சுவாரஸ்யமான உண்மை இருக்கிறது. பிரியங்கா ஒரு டிவி தொகுப்பாளர். அவர் செய்யும் வேலைகள் திட்டமிடப்பட்டவை, ஸ்டூடியோ அடிப்படையிலானவை, உடலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை. அதேசமயம், சமந்தா இருக்கும் துறை சினிமா.

ரோபோ சங்கர் இறப்பதற்கு 10 நாளுக்கு முன்பு நடந்த சம்பவம்.. கடைசியாக நடித்த படத்திலும் அதே நிலைமை! பிரியங்கா உருக்கம்
படப்பிடிப்பு என்றாலே நீண்ட நேர வேலை, பயணம், உடல் உழைப்பு, ஆக்‌ஷன், வெளிநாட்டு ஷூட், கடுமையான கால்ஷீட் என பல விஷயங்கள் இணைந்து வரும். அதனால், இருவரும் கர்ப்பத்தை அணுகும் முறை ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதையும் ரசிகர்கள் இப்போது புரிந்துகொண்டு வருகிறார்கள்.

ஆனால் சோஷியல் மீடியா என்பதால், ஒப்பீடு இல்லாமல் போகுமா? "பிரியங்கா கர்ப்பமாக இருந்தும் செம ஆக்டிவ்... சமந்தா மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் பிரேக்?" என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு பதிலாக சமந்தா ரசிகர்கள் சொல்லுவது, "அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பிரச்சனைகள், தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், மனஅழுத்தங்கள் என நிறைய விஷயங்களை சந்தித்து வந்தவர். இப்போது அவர் பிரேக் எடுத்தது ரொம்ப சரியான முடிவு" என்பதுதான்.

Priyanka Deshpande Samantha

சமந்தாவின் பயணம்

சமந்தாவின் பயணத்தை நினைத்துப் பார்த்தாலே அந்த கருத்து புரியும். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். 'நீதானே என் பொன்வசந்தம்', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', 'சூப்பர் டீலக்ஸ்' என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

அதன் பிறகு உடல்நிலை சிக்கல்களால் சினிமாவில் இருந்து ஓரளவு விலகி, மீண்டும் போராடி கம்பேக் கொடுத்தவர். அந்த நிலையில் இப்போது கர்ப்பத்தை அறிவித்திருக்கும் சமந்தா, "வேலைக்கு விட இப்போ உடல்நலம், குழந்தை, அமைதி முக்கியம்" என்று முடிவு செய்திருப்பது ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது.

அதே நேரம், பிரியங்காவைப் பற்றிய ரசிகர்களின் ரியாக்ஷனும் வேற மாதிரி இருக்கிறது. சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கடந்த பிறகு மீண்டும் காதல், திருமணம், இப்போது தாய்மை என புதிய அத்தியாயத்துக்குள் சென்றிருக்கிறார். அதனால், "இந்த மகிழ்ச்சிக் கட்டத்திலும் அவர் வேலையை நிறுத்தாமல் சந்தோஷமாக முன்னேறுகிறார்" என்பதே ரசிகர்களுக்கு இன்னொரு வகை உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+