ஆட்டு எலும்பு.. ஆரோக்கியமான மட்டன் சூப்.. மூட்டு வலி உள்ளவர்களுக்கு உதவும் ஆட்டிறைச்சி எலும்பு ரசம்
சென்னை: மட்டன் கறியைவிட, அதன் எலும்புகளில்தான் அதிக சத்துக்கள் இருப்பதாக சொல்வார்கள்.. அந்தவகையில், ஆட்டு எலும்புகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? யார் யாருக்கு இந்த ஆட்டு எலும்பு மிகவும் நல்லது? எப்படியெல்லாம் எலும்புகளை உணவில் சேர்க்கலாம்?
ஆட்டு எலும்புகளில் கொலாஜன், குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. இவைகள் மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கக்கூடியது.

குடல் நோய்கள்: எலும்பு, மூட்டு வலிமையை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற நிலைமைகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் மேற்கண்ட சத்துக்கள் எல்லாம் தேவையாக உள்ளன. குறிப்பாக, எலும்புகளில் உள்ள குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை.. குடல் நோய்கள் எதுவாக இருந்தாலும், ஆட்டு எலும்புகளை உணவில் சேர்த்து கொண்டால், அத்தனையும் பலன் கிடைக்கும்.
பெரும்பாலும், ஆட்டு எலும்புகளை ரசம் அல்லது சூப் போல வைத்து குடிப்பார்கள்.. இதனால், அஜீரண கோளாறுகள் நீங்கும்.. எலும்பு சூப் அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் எதிர்ப்பு சக்திகள் கூடும்.. நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு இந்த சூப்கள் பேருதவி புரிகின்றன.
கலோரி: இந்த எலும்புகளில் கலோரி மிகவும் குறைவு.. அதேசமயம் புரதம் சற்று அதிகம்.. எனவே, உடல் எடை குறைக்க நினைப்போரும், அவ்வப்போது எலும்பு சூப் சாப்பிடலாம்.. எலும்பு சூப்களில் காணப்படும் கொலாஜன், சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை.. இதனால் சரும சுருக்கங்கள் தள்ளிப்போடப்படும்.. சருமம் மட்டுமல்லாமல், தலைமுடி, நகங்களுக்கு வலுவை தந்து, பாதுகாக்கக்கூடியவை..
இது உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இரவில் சரியாக தூக்கம் வராதவர்களுக்கு இந்த எலும்பு சூப் நிச்சயம் கை கொடுக்கும்.. காரணம் இதிலுள்ள கிளைசின் அமினோ அமிலம் உடல் சோர்வை போக்கி, நிம்மதியான தூக்கத்தை தரக்கூடும். இருதய தசைகளை பலப்படுத்தும் ஆற்றல் ஆட்டு எலும்பு சூப்புக்கு நிறையவே உள்ளது.
குடல் அழற்சி: குடல் அழற்சி இருப்பவர்கள் இந்த எலும்பு சூப்பை அடிக்கடி குடித்து வரலாம். அதேபோல, கீல் வாத பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த ஆட்டு எலும்பு மிகச்சிறந்த உணவாகும். அதாவது, கீல்வாதம், மோசமான மூட்டுகள் உள்ளவர்களுக்கு, வலி, விறைப்பு உள்ளிட்டவைகளை போக்கக்கூடிய தன்மை, கொலாஜன் நிறைந்த இந்த ஆட்டு எலும்புகளுக்கு உண்டு என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.
எனவே பக்க விளைவுகள் இல்லாத ஆட்டு எலும்பு சூப்பினை, மிளகு சேர்த்து வாரம் ஒருமுறையாவது குடித்து வருவது ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடியது என்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications