வெப்ப கால நோய்களை தீர்க்கும் அதிசய நிவாரணி.. இஞ்சியின் பயன்களும் மருத்துவ குணங்களும்!
சென்னை: ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை நல்ல ஆரோக்கியமான உணவு, அவை சமையல் அறையில் இருந்து கிடைக்க பெறுகின்றன. நம்மை சுற்றி உள்ள இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளை சரியான முறையில் பயன்படுத்தினாலே நோயின்றி வாழலாம். இயற்கையின் மிக பெரிய மூலிகை மருந்தாகவும் மற்றும் சர்வலோக நிவாரணியாக கருதப்படுகிறது இந்த இஞ்சி. பல நோய் பிணிகளை தீர்க்கக்கூடிய சக்தி, இஞ்சி மூலிகையில் உள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும், எண்ணற்ற பயன்களும் உண்டு. இஞ்சி செம்மண் நிலத்தில் பயிரிட்டு சுமார் ஓர் ஆண்டு வரை பயிராகும், இதற்கென்று விதைகள் கிடையாது, ஆனால் இதற்கு கணுக்கள் நிறைந்து காணப்படும், அவற்றையே மறுபடியும் மண்ணில் புதைத்து செடியாக்குகின்றனர். இது ஒரு பூக்கும் தாவரமாகும். இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்களும், எண்ணற்ற பயன்கள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இஞ்சி ஒரு காயா கல்ப மூலிகை: காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று சாப்பிட்டால், முதிர் வயதிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்க முடியும். வெப்ப காலத்தில் மற்றும் பொதுவாக ஏற்படக்கூடிய செரிமான பிரச்சனை, கடுமையான தலைவலி, சளி, இருமல், மார்பு வலி, வயிற்று வலி, உப்புசம், இடுப்பு வலி, பசியின்மை, தொழுநோய், பித்தம், நீரிழிவு, போன்ற பல வியாதிகளுக்கு இஞ்சி நல்ல நிவாரணியாக செயல்படும் என்பது சந்தேகம் இல்லை, மேலும் இது காயா கல்ப மூலிகை எனவும் அழைக்கப்படுகிறது.

வாந்தி, குமட்டல் போக்க: உடலில் வேண்டாத பாக்டீரியா அல்லது ரசாயனம் போன்றவை புகுந்துவிட்டால், இரைப்பையில் உள்ள சில நரம்பின் வழியாக மூளைக்கு சென்று, ரசாயன மாற்றத்தால் குமட்டல், மற்றும் வாந்தி வருகிறது. நமது மூளையின் பின்பகுதியில் உள்ள போஸ்ட்ரீமா (Area Postrema) மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகின்றது. இதனால் பயணம் செய்யும்போது (Motion Sickness) என்றும், உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவு, அஜீரண கோளாறு, செரிமான பிரச்சனை போன்றவற்றை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. முக்கியமாக வாந்தியை கட்டுப்படுத்துவதற்கு இஞ்சி மிக சிறந்த மருந்தாக பயன்படுவதை, அறிவியல் ரீதியாக கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு, கை குழந்தைக்கு: கர்ப்பிணி பெண்களுக்கு தாங்கள் கருவுற்ற ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தியை குறைக்க, இஞ்சி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது எந்த வித பக்க விளைவுகளும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஏற்படுத்தாது. சில நேரங்களில் வயிற்று வலி, இடுப்பு வலி ஏற்படுவதுண்டு. அது போன்ற சமயத்தில், தேவையான அளவு இஞ்சி சாறுடன், சிறிது நெய், வெல்லம், இவை எல்லாம் பசும் பாலில் கலந்து குடித்தால், வலி ஏற்படாது. மேலும் குமட்டல் நிற்க அடிக்கடி உணவில் இஞ்சித்துவையல், மற்றும் இஞ்சிக்கஷாயம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். பால் குடிக்கும் கை குழந்தைக்கு அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்படும், இதை சரிசெய்ய, சிறிது தாய் பாலை எடுத்து அதில் சுக்கை இழைத்து குழந்தையின் வயிற்றில் தடவினால், வயிறு உப்புசம் நீங்கும்.
உடல் பருமன், செரிமான பிரச்சனை: இன்று பலரும் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் , மற்றும் ஜீரண கோளாறு. இவை பெரும்பாலும் முறையற்ற துரித உணவு வகை உட்கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடாமல், பசியின்மை ஏற்பட்டு, காலங்கடந்து சாப்பிடுவதால், இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது. எனவே உடல் பருமன் ஜீரண கோளாறு தீர்க்க, இஞ்சி மிக சிறந்து மருந்தாக செயல்படும். இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க, இஞ்சி சாறுடன், சிறிது எலுமிச்சை சாறு, தேன், மிளகு தூள் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் கலந்து குடித்தால் செரிமான பிரச்சனைகள் தீரும், உடல் எடையை குறைக்க உதவும்.
மந்தம் வயிறு உப்புசம்: இரவில் சரியான தூக்கையின்மையினால் , பகலில் மந்த உணர்வும், வயிறு உப்புசம் ஏற்படும். இதனால் வயிறு கனம், காற்றிரைச்சல் போன்ற கோளாறுகள் வரும். இதை சரிசெய்ய, பச்சைக் கொத்தமல்லியுடன் இஞ்சியை சேர்த்து துவையல் செய்து, மதிய உணவில் கலந்து சாப்பிட்டுவந்தால், இப்பிரச்சினை நீக்கி, நன்கு பசியை உண்டாக்கும்.

மார்பு வலி, மலசிக்கல் அகல : சிலருக்கு அடிக்கடி ஏற்படும் வாய்வு தொல்லையினால், மார்பு வலி உண்டாகும். தேவையான அளவு இஞ்சி (தோல் சீவி) மற்றும் வெள்ளை பூண்டு இரண்டையும் மைய அரைத்து, வெந்நீரில் கரைத்து, வடிகட்டி, காலை-மதியம் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், வாய்வு தொல்லை நீங்கி, மார்பு வலி முற்றிலும் குணமாகிவிடும். மல சிக்கல் உள்ளவர்கள், வாரத்தில் 2-3 முறை இஞ்சி பச்சடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால், மல சிக்கல் பிரச்சனை தீரும்.
மாதவிலக்கு, ஒற்றை தலைவலி நீங்க: சிலருக்கு கடுமையான தலைவலி, மற்றும் ஒற்றை (Migraine Headache) தலைவலி அடிக்கடி ஏற்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன் ஒற்றை தலைவலி வரும். இதை சரிசெய்ய தேவையான அளவுக்கு இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஊறவைக்கவேண்டும். அதிக அளவில் இவை செய்தால், புளித்துவிடும் (ஒரு வாரத்திற்கு தயார்செய்தால் போதுமானது). தினமும் காலை வெறும் வயிற்றில் அல்லது தேவைப்படும்போது, 1/2- 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, ஒற்றை தலைவலி, பித்த தலைவலி வருவதை தடுத்து நிறுத்தும். மேலும் கடுமையான தலைவலிக்கு சுக்கை தூள் செய்து, சிறிது அரிசிமாவில் கலந்து, நெற்றியில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications