முருங்கையிலை பொடி அற்புதம்.. தீராத நோய்களுக்கும் தீர்வு தரும் முருங்கை கீரை எண்ணெய்யின் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிரை காக்கும் சஞ்சீவினிதான் முருங்கை இலை.. முருங்கையின் பொடியும் எண்ணெய்யும் செய்யும் மாயத்தை தெரிந்தால் இனி ஒரு சொட்டு கூட வீணாக்க மாட்டீர்கள்.. தீராத நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கையின் ரகசியம் இதுவாகும்.. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும் இந்த அதிசய மூலிகையின் பயன்களை உடனே அறிந்து கொள்ளுங்கள்.. அதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

இயற்கை அன்னை மனித குலத்திற்கு வழங்கிய கொடைகளில் முருங்கை மரம் மிக முக்கியமானது.. முருங்கை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதால், இதனை ஒரு நடமாடும் மருந்தகம் என்றே அழைக்கலாம்..

Moringa Powder Benefits

முருங்கைக்கீரை நன்மைகள்

குறிப்பாக முருங்கை இலைகள், பூக்கள், காய்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமான சத்துக்களைக் கொண்டுள்ளன.. இன்றைய வேகமான உலகில் முருங்கை கீரையைச் சமைக்க நேரமில்லாதவர்களுக்கு, அதன் பொடியும் அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யும் ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன..

முருங்கை இலையில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் A, C, E என உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கொட்டிக்கிடக்கின்றன.. இவை வெறும் சத்துக்கள் மட்டுமல்லாமல், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் தன்னுள் கொண்டுள்ளன..

முருங்கை இலை பொடி பயன்கள்

முருங்கை இலை பொடியைத் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு செயலாகும்.. முருங்கை கீரையை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்திப் பின் பொடியாக அரைத்து சலித்து வைத்துக் கொண்டால், 3 மாதங்கள் வரை அதன் சத்துக்கள் குறையாமல் பயன்படுத்த முடியும்..

இந்த பொடியை சுடுநீரில் கலந்தோ அல்லது சூடான சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் பலன் அளிக்கும்.. வளரும் குழந்தைகளுக்குத் தேனுடன் கலந்து கொடுக்கும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது..

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலப் பிரச்சனைகளைச் சரி செய்யவும், உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் முருங்கை பொடி ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.. சர்க்கரை நோயாளிகள் இதனைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது..

முருங்கை விதை பொடி

முருங்கையின் இன்னொரு மிக முக்கியமான நன்மை, அதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும்.. நன்கு காய்ந்த முருங்கை விதைகளை செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இந்த எண்ணெய், அழகு பராமரிப்பில் மெயின் பொருளாகவே சேர்க்கப்படுகிறது, செயல்படுகிறது..

இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E சத்துக்கள், தோலில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகின்றன..

காற்றில் உள்ள மாசுக்களால் ஏற்படும் சருமப் பாதிப்புகளைத் தடுத்து, முகத்தில் உள்ள கருவளையங்களை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.. மேலும், தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கை எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும்.. இது வேர்க்கால்களுக்கு சென்று ஈரப்பதத்தை அளிப்பதோடு, கூந்தலை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரச் செய்கிறது..

கல்லீரல், கண் பார்வை

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து கல்லீரலை பாதுகாப்பதில் முருங்கையின் பங்கு அளப்பரியது.. புற்றுநோய் வராமல் தடுப்பதிலும், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைப்பதிலும் இது முன்னணியில் நிற்கிறது..

அதுமட்டுமல்ல, கண் பார்வை மங்குதல் போன்ற குறைபாடுகளை தடுக்க இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது.. இவ்வளவு நன்மைகளைக் கொண்ட முருங்கை எண்ணெய்யும் பொடியும் இன்றைய நவீன மருத்துவ உலகில் பல அழகு சாதனப் பொருட்களில் மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன..

மொத்தத்தில் முருங்கை என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் இயற்கை அமுதம் என்றே சொல்லலாம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+