Mother's day special: சூரிய நமஸ்காரம் முதல் வக்ராசனம் வரை! 5 போதும்! ஆயுள் நீளும்! டாக்டர் தீபா
சென்னை: அன்னையர் தினத்தின் போது ஒவ்வொரு பெண்களும் தங்கள் உடல்நிலையையும் ஆரோக்கியத்தையும் காக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ஒய். தீபா தெரிவித்துள்ளார்.

அன்னையர் தின ஸ்பெஷலுக்காக டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தாய்மைக்கால ஆரோக்கியம் குறித்தும் உணவு முறைகள் குறித்தும் பார்க்கலாம்.
தாய்மை என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பயணம் என சொல்லலாம். ஒரு பெண், குழந்தையாக பிறந்து, பூப்பெய்து, திருமணம் செய்து கொண்டு, முழுமை அடைவது என்பது அவள் தாய்மை அடையும் போதுதான்! மே மாதம்தான் அன்னையர் தினம் என்றில்லை. ஒவ்வொரு நாளும் நாம் தாய்மையை கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை ரோல்
தாயானவள் மனைவியாக, மகளாக, தாயாக, சகோதரியாக என நிறைய பொறுப்புகளை சுமக்கிறாள். அப்போது தனது உடல்நலம் குறித்த கவலையை மறந்து உடலை வருத்தி பணிகளை செய்கிறாள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடல்நலனை பேணி பாதுகாப்பது முக்கியம். அது குறித்து பார்க்கலாம்.
தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு தண்ணீர் தேவை. நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல் ஏன் சாப்பிடுகிறீர்கள் என தாய்மார்களிடம் கேட்டால், அவர்கள் சென்னையின் ஸ்லீப்பிங் டைமே இரவு 11- 12 மணிதானே என்கிறார்கள்.
தூக்கம்
ஒருவருக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் என்பது முக்கியமானது. நேரம் தவறி சாப்பிடும் போது பித்தப்பையில் கற்களை ஏற்படுத்தும். கர்ப்பப்பையில் கட்டி, ஹார்மோன் இம்பேலன்ஸ் வரும். வாழ்வியல் மாற்றங்களால் நாம் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறோம்.
காலை உணவை தவிர்க்கவே கூடாது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலானது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியே தள்ளிவிட்டு அடுத்த உணவை எடுத்துக் கொள்வதற்காக வயிறு காத்திருக்கும். அப்போது நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து சத்துகள்தான் அந்த நாள் முழுக்க நாம் ஓடியாட எனர்ஜியை தரும்.
உணவு முக்கியம்
break the fast அதுதான் breakfast. மீந்து போன உணவுகளை சாப்பிடுவதற்கு நம் வயிறு குப்பைத் தொட்டி இல்லை. அந்தந்த வேளைக்கு சமைக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். பிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம். புற்றுநோயின் விகிதம் அதிகரிப்பதற்கு காரணமே நம் உணவு பழக்கவழக்கம்தான். பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் பேக்டீரியா இன்பெக்ஷன் ஏற்பட்டு குடல் பாதிக்கப்படும். இதனால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் பேதியாகும். இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.
தண்ணீர் எத்தனை லிட்டர்
இவற்றை தவிர்க்க right food at right time என்பதை பின்பற்றுங்கள். ஒரு நாளைக்கு 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். வாய் வைத்து குடிக்க வேண்டும். அன்னாந்து குடிக்க கூடாது. பெண்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
தண்ணீரை சரியான அளவு எடுத்துக் கொள்ளாவிட்டால் ஹார்மோன் சுரப்பது சீரற்ற நிலையில் இருக்கும். சோர்வு ஏற்படுவதும் தண்ணீர் குறைவாக குடிப்பதால்தான். சிப் செய்து தண்ணீரை குடிக்கும் போது மன அழுத்தத்தை குறைத்து பதற்ற நிலையை கட்டுப்படுத்தும்.
தூக்கம்
மதியம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் இரவு சீக்கிரம் தூங்குவதற்கு உதவும். நைட் முழுக்க போனை பார்த்துக் கொண்டு இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு உடலில் நோய்களை கொடுக்கிறது. இதனால் பிசிஓடி எனும் கருப்பையில் நீர் கட்டி வருகிறது. சரியான தூக்கம், குறித்த நேரத்தில் உணவு, தண்ணீர் குடித்தல் போன்றவற்றில் முறை இல்லாததால் இன்று பலர் குழந்தையின்மை சிகிச்சைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
உணவு என்ன?
வாரத்தில் இரு நாட்களுக்கு கீரை சாப்பிட வேண்டும். பால், கேழ்வரகு, கம்பு, சிறுதானியங்கள் உள்ளிட்டவைகளையும் சாப்பிடலாம். கால்சியம் குறைபாடு இருந்தால் அதுவே நமக்கு மூட்டு வலிகளை ஏற்படுத்தும். அந்த காலத்தில் 60 வயதில் மூட்டு வலி வந்த நிலையில் பிறகு அது 40 வயதானது. தற்போது 20, 30 வயதில் எல்லாம் பெண்கள் முட்டி வலி, கால் வலி என மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
நடைபயிற்சி
அவர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் நாங்கள் சிகிச்சை கொடுக்கிறோம். புரதச்சத்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். புற்றுநோய் கூட வராமல் தடுக்க இந்த உடற்பயிற்சிகள் உதவும். வாக்கிங், 8 வடிவில் நடத்தல், சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
ஒரு 5 ஆசனங்களை தினந்தோறும் செய்தாலே போதும். அதாவது சூரியநமஸ்காரத்தில் உள்ள 12 ஸ்டெப்களை செய்துவிட்டு புஜங்காசனம், தித்திலி ஆசனம், தாடாசனம், வக்ராசனம், மலாசனம். இந்த ஆசனங்களை செய்தாலே மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கி, நம் கருப்பையை வலிமைப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும்.
5 ஆசனங்கள்
இந்த 5 ஆசனங்களுடன் சேர்த்து பிராமரி பிராணயாமம், நாடி சுத்தி பிராணயாமம் செய்யலாம். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் ஷீத்தாலி பிராணயாமத்தை காலையில் 5 முறையும் மாலை 5 முறையும் செய்யலாம். இந்த ஆசனங்களுடன் முத்திரைகளை செய்யலாம். பெண்களுக்கான சிறப்பு முத்திரை என்றால் அது யோனி முத்திரையாகும். இதோட வடிவமே கர்ப்பப்பை மாதிரி இருக்கும். இது நம் கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.
தைராய்டு நீங்க
தைராய்டு பிரச்சினை நீங்க, வராமல் தடுக்க ஜலந்திர பந்தா செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நாம் இருப்பது அவசியம். அதாவது காலை 9 மணிக்குள், மாலை 4.30 மணிக்கு மேல்! அப்போது ஃபிரஷ்ஷான காற்றை சுவாசிக்கும் போது நம் சருமத்தில் உள்ள துவாரங்கள் ஓபன் ஆகி அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
விட்டமின் டி முக்கியம்
விட்டமின் டி யும் கிடைக்கும். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தை பேறு தொடர்பான பிரச்சினைகளுக்கு vitamin D முக்கியம். விட்டமின் டி என்பது ஹார்மோன்களை சீர் படுத்தும். இதனால்தான் இயற்கை மருத்துவத்தில் வாழை இலை குளியல், மண் குளியல், எண்ணெய் குளியல் உள்ளிட்டவைகளை சூரிய வெளிச்சத்தில் கொடுத்து வருகிறோம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை தினமும் செய்வதுடன் நேரம் கிடைக்கும் போது தனது குடும்பத்தினரையும் அதில் ஈடுபடுத்துதல் வேண்டும். எப்போதும் 4 சுவற்றுக்குள் மட்டுமே இல்லாமல் விட்டுக் கொடுத்தல், கூடி வாழுதல் போன்றவை இருந்தால் இதை அடுத்த தலைமுறையினருக்கும் போய் சேரும். மாடி தோட்டம் வைப்பது, தோட்டம் வைப்பது உள்ளிட்டவைகளை செய்யலாம். இது நமது மனதிற்கு புத்துணர்வை கொடுக்கும்.
ரிலாக்ஸ் டெக்னிக்
மனதை ரிலாக்ஸ் செய்ய Deep relaxation technic, யோக நித்ரா போன்றவற்றை செய்யலாம். அது போல் குழந்தைகளிடம் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதனால் குழந்தைகளும் மன உளைச்சல் இல்லாமல் இருப்பார்கள். தாய்மார்களும் குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பினால் ஏற்படும் கவலையில் இருந்து விடுபடுவார்கள். அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications