வெற்றிலையில் இத்தனை மருத்துவ சிறப்பம்சங்களா இருக்கா?
வெற்றிலையில் உள்ள எண்ணற்ற பயன்களும், அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்கள்
சென்னை: வெற்றிலை பல சுப காரியங்களுக்கும், குறிப்பாக வீட்டு விசேஷங்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சியில் தாம்பூல தட்டில் வைப்பது தமிழர்களின் மரபு. அதுமட்டுமின்றி உண்ட பின்னர், வெற்றிலையுடன் பாக்கு-சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவது வழக்கமாகும். வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, மற்றும் சாதாரண வெற்றிலை என்ற வகைகளும் உள்ளன. கருப்பு நிறத்துடன் காரத்துடன் கம்மாறு வெற்றிலை இருக்கும், கற்பூர மணத்துடன் இருப்பது கற்பூர வெற்றிலை. இவை கொடி வகையானபடியால், இதின் வேர், இலை என எல்லாவற்றிலும் மருத்துவ பலன்கள் தரக்கூடியது. சித்த மருத்துவத்தில், வெற்றிலையில் மருந்து மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதால், மருந்தின் வீரியத்தை அளிக்கிறது
சிறு குழந்தைகள் ஏற்படும் கோழைக்கட்டு, அஜீரணக்கோளாறு, மல சிக்கல், பெரியோருக்கு ஏற்படும் கடுமையான தலைவலி, போன்ற பலவிதமான நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டிமைக்ரோபியல் இருப்பதால் கடுமையான இரும்பல் பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.

வெற்றிலையின் பல்வேறு நன்மைகள்
இதில் மருத்துவ மூலிகை இருப்பதால், பசி உண்டாக்கும், ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், வாத நோய், வறட்டு இரும்பல், நுரையீரல், செரிமான கோளாறு, ஒற்றை தலைவலி, பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரக்க, என சர்வ ரோகங்களை போக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் வெற்றிலையுடன் சிறிது பாக்கு சேர்த்து சாப்பிட்டால் பல்வேறுபட்ட நோய்களும் குணமாகும்

வலி நிவாரணி
பல் வலி, ஈறுகளில் வீக்கம் நீக்க, சிறிது மென்று வந்தால், வலி குறையும், சிறிது வெற்றிலை சாறுடன், வெந்நீர் கலந்து குடித்தால், வயிற்று வலி, வயிற்று மந்தம், உப்பிசம் போன்றவை விரைவில் நீங்கும். ஒற்றை தலைவலிக்கு சிறிது வெற்றிலையை ஈரமாக்கி தலையின் இருபக்கம் அல்லது ஒரு பக்கம் வைத்தால் உடனடியாக வலி குறையும். தேள் கடி விஷத்தை முறிக்க இலையுடன் 5-6 மிளகு, சிறிது தேங்காய் மென்று சாப்பிட்டால், விஷம் இறங்கும்.

குழந்தைக்கு மல சிக்கல், அஜீரண கோளாறு நீக்கும்
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால், வெற்றிலை மிளகு இரண்டையும் சேர்த்து கஷாயம் போல் செய்து கொடுத்தால் அஜீரணம் நீங்கி, பசியை தூண்டும், மேலும் கை குழந்தை பால் குடிக்க முடியாமல், கோழைக்கட்டு ஏற்படும் நேரத்தில், வெற்றிலை சாறுடன் சிறிது அளவு கோரோசனை கலந்து கொடுத்தால், கோழைக்கட்டு நீங்கிவிடும், சளி, இரும்பல் ஆகியவையும் குணமாக்கும்.

தாய் பால் சுரக்க
பாலூட்டும் பெண்களுக்கு அதிக பால் சுரக்க, சிறிது ஆமணக்கு எண்ணெயில் வெற்றிலையை வதக்கி மார்பில் கட்டி வந்தால் தாய் பால் சுரக்கும். சில சமயங்களில் மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டு வீக்கம் ஏற்படும்போது, மண்சட்டியில் மிதமான சூட்டில் வெற்றிலையை வதக்கி மார்பகங்களில் கட்டிவந்தால் வீக்கம் குறைத்துவிடும்.

விதைப்பை வீக்கம், சிறுநீர் பிரச்சனை தீர
விதைப்பையில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால், வெற்றிலையை மைய அரைத்து வீக்கத்தில் கட்டினால் வலி குறைந்து, வீக்கமும் மறையும். உடல் சூடேறி சிறுநீர் சரியாக வெளியேற்றாமல் இருந்தால், வெற்றிலை சிறிதளவு சாறுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்த பாலுடன் கலந்து குடித்தால், சிறுநீர் பெருகி சரியாக வெளியேற்ற உதவும்
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications