பகலில் குட்டி தூக்கம் போடுறவங்களா நீங்க.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க.. டைம் முக்கியமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிய உணவு சாப்பிட்டதும் ஒரு சிலர் குட்டித்தூக்கம் போடுவதுண்டு. இப்படி மதிய வேளையில் 30 நிமிடங்களுக்கு மேலாக குட்டி தூக்கம் போட்டால் நீரிழிவு, இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

என்னதான் இரவு நன்றாக தூங்கினாலும் சிலருக்கு பகலில் ஒரு குட்டி தூக்கம் போட்டால்தான் சற்று உற்சாகம் பிறக்கும். அதுவும் மதிய நேரத்தில் தூங்குவது பலருக்கும் கை வந்த கலைதான்.. பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்கு பிறகு கணக்கு பிரீயட் வந்தால் எப்படி கண்ணை சொக்குமோ அதுபோல பலருக்கும் பகலில் ஒரு தூக்கம் போடாவிட்டால் ஒரு மந்தமான நிலைக்கு போய்விடுவார்கள்.

 Naps during the day for more than 30 minutes is not good for the Health says New study

பகலில் போடும் குட்டித்தூக்கத்தில் பல நன்மைகள் உடலுக்கும் மனதிற்கும் கிடைத்தாலும் அதுவும் எல்லை மீறினால் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விடும் என்று புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக குட்டி தூக்கம் போட்டால் நீரிழிவு, இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதாவது, பகலில் குட்டி தூக்கம் போடாதவர்களுடன் ஒப்பிடும் போது 30 நிமிடங்களுக்கு மேல் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு முன் சொன்ன பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. எனினும் 30 நிமிடங்களுக்கு குறைவாக குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறைகிறதாம்.

ஸ்பெயினில் 3,275 பேரை இரு குழுக்களாக பிரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நீண்ட நேரம் அதாவது 30 நிமிடத்திற்கு மேலாக தூங்குபவர்களுக்கு பி.எம்.ஐ அதிகரிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வரும் அபாயம் பிறரை விட அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 Naps during the day for more than 30 minutes is not good for the Health says New study

குட்டி தூக்கம் சரியாக அமைய என்ன செய்ய வேண்டும்?

* குட்டி தூக்கம் போடும் அறை இருள் நிறைந்ததாகவும் குளுமையானதாகவும் இருப்பது அவசியம்.
* எந்த ஒரு தொந்தரவும், சத்தங்களும் இல்லாமல் அறை இருந்தால் குட்டி தூக்கத்தையும் சிறப்பாக போட்டு விட முடியும்.
* வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குட்டி தூக்கம் போட வேண்டும் என்றால் மேற்கூறியது எல்லாம் கதைக்கு ஆகாது. எனவே, அப்போது கண்களை மூடிக்கொள்ள மாஸ்க் (eyemask) பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், சத்தங்கள் கேட்காமல் இருக்க earplugs- பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அலாரம் வைத்துக்கொண்டு தூங்கலாம். இதனால், சரியான நேரத்தில் எழ முடியும். வேலையும் கெட்டுப்போகாது.. உடல் நலனுக்கும் ஆரோக்கியம் அளிப்பதாக இருக்கும்.

 Naps during the day for more than 30 minutes is not good for the Health says New study

குட்டி தூக்கம் போடுவதால் நன்மைகள்:

* பகலில் இப்படி சிறிய குட்டி தூக்கம் போடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும், வேலையில் திறன் அதிகரிக்கும்.
* நல்ல மனநிலை, துடிப்புடன் இருப்பது, மன அழுத்தம் குறைவது என ஏராளமான பலன்கள் உள்ளது.
* எனவே இரவு சரியாக தூங்கவில்லை என்றாலோ.. ஓய்வு எடுக்க வேண்டும் என்றாலோ.. நீங்கள் தாராளமாக எந்த தயக்கமும் இன்றி குட்டித்தூக்கத்தை போடலாம். ஆனால் அது நீண்ட நேரம் சென்று விடக்கூடாது. ஏனெனில் பகலில் நீண்ட நேரம் தூங்கிவிட்டால் இரவு தூக்கத்தையும் கெடுத்து விடும். இதனால், அதிலும் கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+