உங்கள் வறண்ட சருமம் பளபளக்க, இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க!
வறண்ட சருமம் மற்றும் ஃபேஸ் பேக் டிப்ஸ், பற்றிய குறிப்புகள்
பெண்கள் இயற்கையாகவே அழகுதான், இருப்பினும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை பிரகாசமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள், குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், வரும்போது அவர்கள் இன்னும் தங்களை அழகை காட்ட முயற்சி செய்வதுண்டு.அதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், காஸ்ட்லி மேக் அப் பொருட்கள் கொண்டு தங்களை அழகுபடுத்திக்கொள்கிறார்கள்.
பின் நாட்களில் அவை சருமத்திற்கு ஓவ்வாமை ஏற்படுத்தி அழகையும், சருமத்தையும் பதிப்படையச்செய்யும், எப்போது இயற்கையான முறையில் அழகை பராமரிப்பது மிகவும் சிறந்தது. மேலும் இயற்கை பொருட்கள் சருமத்திற்கு பாதுகாப்பானவை, அவை எந்த இரசாயனமும் இல்லாதவை என்பதால் சருமத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சருமத்தை முறையாக பராமரித்துவந்தால், நிச்சயம் அழகு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு அழகு குறிப்பு இருந்தாலும், இந்த டிப்ஸ் பயன்படுத்தி எளிய முறையில் எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

டிப்ஸ் 1
அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். அரிசி மாவு சருமத்தில் உள்ள கருமைகள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் வறட்சியை நீக்கி நல்ல பொலிவை தரும். தேங்காய் எண்ணெய்யில் உள்ள சாச்சுரேட்டே கொழுப்புகள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க செய்யும்.

டிப்ஸ் 2
கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும். கடலை மாவு சரும வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்க உதவும், முகத்தில் இருக்கும் தழும்புகள் மறைய, தேனைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிவந்தால் தழும்புகள் மறையும்.

டிப்ஸ்3
பச்சை பயிறு மாவு, சிறிது பால், தேன், பன்னீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அதிக முடி வளரும், அத்தகைய முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த பாசிப்பயிறு மாவில், மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் போல் செய்து தினமும் காலை, மாலை 2 முறை தடவிவந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி கட்டுப்படுவதை பார்க்கலாம்.

டிப்ஸ் 4
வறண்ட சருமத்திற்கு பாலில் கசகசாவை ஊறவைத்து மைய அரைத்து, 10 நிமிடம் பூசி பின் முகம் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும். அம்மை நோயால் ஏற்படும் தழும்புகள் மறைய கசகசாவுடன் வேப்பிலை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து தடவிவர தழும்புகள் மறையும்.

டிப்ஸ் 5
பால் ஏடு, அல்லது உருளைக்கிழங்கு மைய அரைத்து, 10 நிமிடம் முகத்தில் தடவி பிறகு கழுவவேண்டும் சருமம் மென்மையாக இருக்கும். பால் ஏடு முகத்தில் தடவினால் முகப்பருக்கள், கருவளையங்கள், முக சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளவென்று இருக்கும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications