சிறுநீர் எந்த நிறத்தில் வருகிறது? "இந்த" கலரில் வந்தால் டேஞ்சர்! மருத்துவர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை சொல்லிவிடலாம்.

இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னிடம் 5 பேரது சிறுநீர் உள்ளன. இதை வைத்து யாருக்கு என்ன பிரச்சினை என்பதை அறியலாம்.

One can say the health issue by checking the urine colour

அடிக்கடி மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வந்தால் ஒருவர் போதிய அளவுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கிறார் என்று அர்த்தம். அதே நேரத்தில் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவருடைய கல்லீரலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். அது மஞ்சள் காமாலையாகக் கூட இருக்கலாம்.

நுரையுடன் கூடிய சிறுநீர் வந்தால் குடல்களில் ஏற்படக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம் என்று அர்த்தம். சிறுநீர் குழாய்களில் ஏற்படும் தொற்றாகவும் இருக்கலாம். ரத்தம் போல் சிறுநீர் சிவப்பு நிறத்தில் இருந்தால் சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பாகக் கூட இருக்கலாம். சிறுநீரக புற்றுநோயாகவும் இருக்கலாம்.

எந்த நிறமும் இல்லாமல் சிறுநீர் வருவதும் நல்லதல்ல! ஏனென்றால் அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் எந்த நிறமும் இல்லாமல் வெளியேறும். ஆரோக்கியமான சிறுநீரின் நிறம் வெளீர் மஞ்சள். அதாவது லேசான மஞ்சள் நிறம். இவ்வாறு டாக்டர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மருந்துகள் உட்கொண்டாலும் சிறுநீர் நிறம் மாறி வரும். இதை மருத்துவர் மருந்து கொடுக்கும் போதே சொல்லி அனுப்புவார்.

உடலில் நிகழும் சில மாற்றங்களையும் பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் சிறுநீர் வெளியேற வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு அரை நாள் பரவாயில்லை. ஆனால் சிறுநீர் தினந்தோறும் வெளியேறினால்தான் உடலுக்கு நல்லது.

இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சினை என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம். மழைக் காலங்களில் அதிக அளவில் சிறுநீர் வெளியேறும். அது போல் சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கும் நிறைய முறை சிறுநீர் வெளியேறும்.

மேலும் சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கவும் கூடாது. சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கிறதா என்பது குறித்து கூட பரிசோதனை மூலம் அறியலாம். அது போல் கர்ப்பமாக இருந்தால் 40 நாட்கள் கழித்து சிறுநீரை எடுத்து சோதனை செய்தால் இரு கோடு வந்தால் கர்ப்பம். ஒரு கோடு வந்தால் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். சிறுநீரில் சிலருக்கு புரதமும் வெளியேறும். இதனால் உடல் பலவீனமடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+