ஆரஞ்சு தோல், மாதுளம் பழத்தோல் தரும் ஜொலிப்பு.. தங்க முகம், பளபள சருமத்துக்கு ஒரே பொடி.. சிம்பிள்
சென்னை: முகம் பொலிவு பெறுவதற்கும், சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், எளிய வகையான முறைகளை கடைப்பிடித்தாலே போதும்.. பொதுவாக, பழங்களை சாப்பிடும்போது, சரும பாதுகாப்பு இயல்பாகவே கிடைக்கிறது. அதேசமயம், அந்த பழங்களின் தோல்களிலும் நிறைய சத்துக்கள் உள்ளதால், அதை வீணாக்காமல், சருமத்துக்கு பயன்படுத்தலாம். அந்தவகையில், 3 வகையான பழங்களை பற்றி பார்ப்போம்.
ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டால், பழத்தைவிட, தோலில் அதிக சத்துக்கள் உள்ளதாக சொல்வார்கள்.. இந்த தோல் சருமத்துக்கு பாதுகாப்பை தரக்கூடியது.. சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, பொலிவு பெற செய்கிறது. பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தால், அதையும் இந்த ஆரஞ்சு பழ தோலை கொண்டே போக்கிவிடலாம்.

ஆரஞ்சு பழத்தோல்
கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்பட்டுவிட்டால் அல்லது சருமத்தில் சுருக்கம் காணப்பட்டால், அல்லது எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், ஆரஞ்சு பழத்தோல் வைத்து சரிசெய்துவிடலாம். இதற்கு ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்துவரவேண்டும். அதேபோல, இந்த பவுடரில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்து வந்தாலும், சருமம் மின்னும்.
அதேபோல, மாதுளம் பழத்தோல்களையும் வீணாக்கக்கூடாது.. பழச்சாறைவிட அதன் தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடண்டுகளும், ஊட்டச்சத்து நன்மைகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழத்தோலை கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொள்ளலாம். இதில், ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் தேன் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.. முகத்தில் நிறம் மாறுபாடு தென்பட்டால், அதற்கும் இந்த பவுடர் உதவுகிறது.
மாதுளம் பழத்தோல் மகிமை
சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்க செய்ய இந்த பவுடர் தூண்டுகோலாகிறது. எண்ணெய் பசையான அல்லது வறண்ட சருமம் இருப்பவர்களுக்கும் இந்த மாதுளம் தோல் பவுடர். உதவுகிறது.. இதனால் சருமத்திலுள்ள நச்சுகளும் நீங்கும்.. புதிய தோல் செல்கள் எளிதில் உருவாகவும் துணைபுரியும்.
இந்த மாதுளம் தோல் பவுடர் 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில், 1 ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, அவகோடா எண்ணெய் ஒரு ஸ்பூன் (அல்லது வேறு ஏதாவது வாசனை எண்ணெய்) கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கழுவி வந்தாலும் சருமம் மென்மையும், பொலிவும் பெறும்.
அற்புதம் அவகேடா
அவகேடா பழத்தில், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் இப்படி பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை வெண்ணைப்பழம் எனபார்கள்.. இந்த பழத்தை வேகவைத்து, அதனுடன் பப்பாளியை மசித்து, தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும் சருமம் பளிச்சிடும்.. அல்லது, வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது சர்க்கரை, பால் சேர்த்தும் முகத்தில் பயன்படுத்தி வரலாம்..
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications