12 வாரம் "இதை" செய்தால் குழந்தையின்மை பிரச்சினை தீரும்.. மருத்துவர்கள் சொன்ன அதிமுக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் குழந்தையின்மை பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துள்ள நிலையில், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்திலும் கூட இதைக் குணப்படுத்த முடியுமாம். அப்படி கீட்டோ டயர்ட்டை பின்பற்றியும் இந்த குழந்தையின்மை பிரச்சினையைத் தீர்க்க முடியும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது பிசிஓஎஸ். அதாவது polycystic ovarian syndrome. இந்தியாவில் சுமார் 22% அதாவது 5இல் ஒரு பெண்ணுக்கு இந்த சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

health doctor women

பிசிஓஎஸ்: ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகத்தில் முடி வளர்ச்சி, முகப்பரு உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கிறது. பிசிஓஎஸ் பிரச்சினை இருக்கும் பெண்களின் உடலில் ஆண் ஹார்மோனாக அறியப்படும் ஆண்ட்ரோஜன்களின் அதிகம் இருக்கும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் டைப் 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் எடையைக் குறைப்பும் சவாலான ஒன்றாக மாறுகிறது. எனவே, பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு உடல் பருமன், இதய பிரச்சினைகளும் இருக்கும்.

வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றங்கள், அதாவது உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே பிசிஓஎஸ் பாதிப்புகளைச் சரி செய்ய முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி தான் 12 வாரக் காலம் கீடோ டயர்ட்டை எடுத்துக் கொண்டால் பிசிஓஎஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கீடோ டயர்ட்: உலகெங்கும் பலரும் விரும்பி பின்பற்றும் முறை தான் இந்த கீடோ டயர்ட். நம்ம ஊரில் கூட பல பிரபலங்கள் இந்த கீடோ டயர்ட் முறையில் உடல் எடையைக் குறைத்துள்ளனர். குறைவான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வதே இதன் அடிப்படை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக உடலுக்குத் தேவையான கலோரிகளை கொழுப்பு மூலம் நிறைவு செய்வதே இந்த டயர்ட் ஆகும்.

அதாவது நமது நமது உடலுக்குத் தினசரி குறைந்தது 130 கிராம் கார்போஹைட்ரேட் தேவை. ஆனால் அதற்குப் பதிலாக வெறும் 230 கிராமை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான மற்ற கலோரிக்கள் கொழுப்பு மற்றும் புரதம் மூலம் பூர்த்தி செய்யப்படும். இந்த கீடோ உணவு முறையில் நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வோம்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்: இதில் நாம் பொதுவாக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் 70-75% கொழுப்பு நிறைந்தது. மேலும், 20-25% புரதம் மற்றும் 5-10% கார்போஹைட்ரேட் கொண்டதாகும். கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பதால் நமது உடல் 'கெட்டோசிஸ்' என்ற நிலைக்குச் செல்கிறது. அதாவது உடல் இயங்க தேவையான எனர்ஜிக்கு உடல் கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்கும்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "காபர்போஹைட்ரேட்களை இந்தளவுக்குக் குறைத்துக் கொழுப்புகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது பிசிஓஎஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவும். இது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும் உதவும். 12 வாரங்கள் கடைப்பிடிக்கும் போது பசி குறையும். ரத்த சர்க்கரை அளவு குறையும். ஆனால், அது நீட்டித்த தீர்வாக இருக்குமா என்றால் அது கொஞ்சம் கஷ்டம்தான்.

12 வாரம் முக்கியம்: ஏனென்றால் 12 வாரங்களில் உங்கள் எடை குறைந்து பிசிஓஎஸ் அறிகுறிகள் குறைந்தாலும் இந்த டயர்ட்டை கைவிட்ட உடன் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, 12 வாரத்திற்கு பிறகும் குறைந்த அளவே காபர்போஹைட்ரேட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேநேரம் இது அனைவருக்கும் ஓர்க் அவுட் ஆகும் என்றும் சொல்ல முடியது" என்றார்.

இந்த கிடோ டயர்ட்டில் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நட்ஸ், மீன்களைச் சாப்பிடலாம். மேலும், கோழி கறியை அதிகளவில் சாப்பிடலாம்.. கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகியவையும் சிறந்த உணவாகும். கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளுடன் சீஸ் மற்றும் ஹெவி கிரீம் போன்ற பால் பொருட்களையும் மிதமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

என்ன சாப்பிடலாம்: அதேநேரம் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். மேலும், இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ள வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களையும் தவிர்க்க வேண்டும். பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல பீர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுவையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+