பிரிட்ஜில் வைக்கவே கூடாத பொருள் இதுதானா? இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க! ஃபிரிட்ஜ் கெட்டுப்போயிரும்
சென்னை: நாம் வீட்டிலுள்ள பிரிட்ஜில் அனைத்து உணவு பொருட்களையுமே வைத்து பாதுகாக்க முடியாது. சில பொருட்களை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, எதிர்வினையாற்றலை உடலுக்கு ஏற்படுத்திவிடும்.. இவைகளை சரியாக கையாளும்போது, பிரிட்ஜின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இவைகளை தவிர மேலும் சில விஷயங்களை கடைப்பிடிக்கும்போது, பிரிட்ஜை பழுதாகாமல் பராமரிக்க முடியும். அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு காய்கறிகளும், வெவ்வேறு காலநிலையில் வளரக்கூடியவை.. குளிர்பிரதேசத்தில், வெப்ப பிரதேசத்தில் விளைவிக்கப்படக்கூடியவை என்பதால், அதற்கேற்ற தன்மையில்தான் இருக்கும்.

காய்கறிகளின் தன்மை
அவைகளின் தன்மைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையில் மட்டுமே வைத்து காய்கறிகளை பராமரிக்க வேண்டும். பூண்டு, வெங்காயம், எண்ணெய் வகைகளை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது.. அதேபோல, கிச்சனிலும் சூடான இடத்தில் வைக்கக்கூடாது.. வெளியில் சாதாரண வெப்பநிலையில் வைக்கலாம்.
பாலை ஃபிரிட்ஜில் வைத்தாலும்கூட சிலசமயங்களில் கெட்டுவிடக்கூடும். ஃபிரிட்ஜின் கதவின் உட்புறமுள்ள பாட்டில் ஹோல்டர்களில் பால் பாக்கெட்டுகளை வைத்தாலும் கெட்டுப்போகிறது.
பால் பாக்கெட்
இதற்கு காரணம், ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, வெப்பமும், உள்ளிருக்கும் குளிர்ச்சியும் என மாறி மாறி ஏற்பட்டு, பாலில் உள்ள பாக்டீரியா வளர காரணமாகிவிடும். எனவே, ஃபிரிட்ஜ் உள்பக்கம், அல்லது ஃப்ரீசருக்குள் பாலை பாக்கெட், பால் பாத்திரத்தை வைப்பது நல்லது. பாக்டீரியாக்களும் நுழைய முடியாது.
அதேபோல இன்சுலின் உட்பட சில மருந்துகளையும் சிலர் ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.. இப்படி மருந்தை வைப்பதாக இருந்தால், அதிலேயே உணவுப்பொருட்கள், இறைச்சி, பூக்களை வைக்கக்கூடாது. ஏனென்றால், மருந்துகளில் மருந்தில், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளது.
எப்போதுமே ஃபிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். ப்ரிட்ஜை எப்போதுமே காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும்.. குறுகிய இடத்தில் வைக்க கூடாது..
ஃப்ரிட்ஜின் பின்புறமிருக்கும் கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். அந்த கம்பி வலைகளில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.
ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கி பொருத்த வேண்டும்.. ப்ரிட்ஜை ஆஃப் செய்தால் உடனடியாக ஆன் செய்யக் அப்படி செய்தால், பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக்கொள்ளும். அதனால், குறைந்தது 3 நிமிடங்கள் கழித்துதான் மறுபடியும் ஆன்செய்ய வேண்டும்..
15 நாட்களுக்கு ஒரு முறையாவது ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் ஐஸை கரைத்து வெளியேற்ற வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ், காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். பிரிட்ஜ் கதவிற்குள் கேஸ்கட் சரியாக இருக்கிறதா? என்னபதையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ஃப்ரிட்ஜ்ஜிலுள்ள டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.. பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து மேற்கண்டவற்றை சரிசெய்வதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
ப்ரீசர் பொருட்கள்
வெளியூர் செல்வதாக இருந்தால் ஃப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. அதற்கு முன்பு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து, அதை நன்கு துடைத்து காய வைத்து பிறகு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும்போது, ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
ப்ரீசரில் நீண்ட நாட்கள் பொருளை வைத்திருந்தால், அதை லேசில் வெளியே எடுக்க முடியாது.. கடினமாக இருக்கும்.. அப்படியிருந்தால் ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பை தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால், எப்போதுமே வெளியில் எடுக்க எளிதாக இருக்கும்..
கூர்மையான பொருட்கள்
ஆனால் எக்காரணம் கொண்டும், கத்தி, கரண்டி போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு குத்தக்கூடாது.. இதனால் ப்ரீசர் பழுதாகாமல் இருக்கும்..
டம்ளர் நீரில் வினிகர், எலுமிச்சை பழச்சாறு, சோடா உப்பு கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்ய வேண்டும்.. 10 நிமிடம் ஊறியதுமே மென்மையான துணியால் போதும்.. அழுத்தமான படிந்த அழுக்குகள் வெளியேறிவிடும்..!
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications