செக்ஸ் பிரியர்களே.. இது மட்டும் வேண்டவே வேண்டாம்.. என்னாது தொண்டை புற்றுநோயா... விஞ்ஞானிகள் அலர்ட்
சென்னை: வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் தொண்டை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8.5 மடங்கு அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த உலகில் மனிதர்களை போல வேறு எந்த உயிரினமும் ஆண்டு தோறும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மனித இனமும் நாகரீகமடைய தொடங்கிய பின்னர் தனது பாலியல் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இனப்பெருக்கத்தையும் தாண்டி மனிதன் ஒரு கூட்டு சமூகமாக வாழ இந்த தனித்தன்மை அவனுக்கு கைகொடுத்தது. இருப்பினும் இதனால் பிரச்னைகள் வராமல் இல்லை. ஏராளமான பிரச்னைகளை இந்த செக்ஸ் மூலம் மனிதன் அனுபவித்து வருகிறான்.

இந்த பிரச்னைகளின் லிஸ்ட்டில் தற்போது புதிய பிரச்னையும் சேர்ந்துள்ளது. அதாவது வாய் வழி செக்ஸ் வைத்துக்கொண்டால் தொண்டை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதுதான் அந்த புதிய பிரச்னை. அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் கடந்த 20 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தொண்டை புற்றுநோய் இதுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
பல விஞ்ஞானிகள் இதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்த நிலையில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மற்றும் மரபியல் அறிவியல் கழகத்தின் பேராசிரியரான ஹிஷாம் மெஹன்னா இதற்கான காரணத்தை கண்டுபிடித்து கூறினார். அதாவது, "கடந்த 20 ஆண்டுகளில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஒரு ஒற்றுமை இருந்தது. இவர்கள் அனைவரும் பாப்பிலோமாவைரஸ் எனப்படும் ஒரு வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வைரஸ் மிகவும் ஆபத்தனான வைரஸாகும்.
இந்த வரைஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்தோ, சிகிச்சையோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இது வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இது ஒரு பாலியல் சார்ந்த வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆய்வில் எங்களுக்கு கிடைத்த சில தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தன. அதில் முக்கியமானது வாய்வழி செக்ஸ். தொண்டை புற்று நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் வாரத்திற்கு 6 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான நாட்கள் வாய் வழி செக்ஸில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே வாய்வழி செக்ஸ், தொண்டை புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது வாய்வழி செக்ஸில் ஈடுபடாதவர்களைவிட அதில் ஈடுபடுபவர்களுக்கு தொண்டை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 8.5 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதில் ஒரேயொரு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே தொண்டை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள 'பாப்பிலோமாவைரஸ்' பரவாமல் தடுக்கப்படுகிறது. வாயில் ஆறாத புண், விழுங்குவதில் சிரமம், வாய் அல்லது தொண்டையில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுகள், பேசுவதில் சிக்கல்கள், எடை இழப்பு, உங்கள் கழுத்தில் திடீரென உருவாகும் கட்டி மற்றும் வாய் துர்நாற்றம் பொன்றவை சந்தேகத்திற்குரியவை.
எனவே இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் கொண்ட நபர் வேறு யாருடனும் செக்ஸில் ஈடுபட கூடாது" என்று பேராசிரியர் ஹிஷாம் மெஹன்னா கூறியுள்ளார். இங்கிலாந்தில் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70%க்கும் அதிகமானோருக்கு வாய்வழி செக்ஸ் வைத்துக்கொண்டதால் இந்த பிரச்னை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications