Yellow yolk or white: முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாமா? டாக்டர் விளக்கம்
சென்னை: முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடலாமா இல்லை குப்பையில் எறிந்துவிடலாமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: முட்டையை சாப்பிட சொன்னால் பலருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்த முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை தூக்கி போட்டுவிடலாமா என கேட்கிறார்கள்.

வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடவா என கேட்கிறார்கள். உலகிலேயே முட்டை குறித்து அதிக ஆராய்ச்சி செய்த நாடுகளில் கூட முட்டை என்றால் முழு முட்டையைத்தான் சொல்கிறார்கள். மஞ்சள் கரு, வெள்ளை கரு சேர்ந்ததுதான் முட்டை!
முட்டையின் வெள்ளைக் கருவில் புரதச்சத்து இருக்கிறது. மஞ்சள் கருவை சாப்பிட ஏன் யோசிக்கிறீர்கள் என கேட்டால், அதில் கொலஸ்டிரால் இருப்பதாக சொல்கிறார்கள். கொழுப்பு என்பது மனிதர்களுக்கு தேவையான விஷயமாகும். அது விலங்குகள் மூலமாகத்தான் கிடைக்கிறது.
இந்த கொழுப்புகள் எதற்கெல்லாம் உதவுகிறது என்பதை தெரிந்து கொண்டால் அந்த கொலஸ்டிராலை யாரும் பீதியுடன் பார்க்க மாட்டார்கள். நம்மிடம் இருக்கும் டிரில்லியன் கணக்கான செல்களில் அந்த செல் மெம்பரேன் கொலஸ்டிராலால் ஆனது.
நாம் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதற்கான ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் தேவை என்றால் அதற்கு கொலஸ்டிரால் தேவை! சூரிய ஒளியிலிருந்து தோலை உற்பத்தி செய்ய கொலஸ்டிரால் தேவை!
இப்படி ஒவ்வொன்றுக்கும் கொழுப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் நம் கல்லீரலே கொலஸ்டிராலை உற்பத்தி செய்கிறது. நம் உடலுக்கு தேவையில்லாத ஒரு விஷயத்தை நம் உடலே உற்பத்தி செய்ய வேண்டியதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
ஆனால் பலர் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதற்காகவே அதை தூக்கி குப்பையில் போடுகிறீர்கள். அதில் என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு இருக்கிறது. விட்டமின் இ, டி இருக்கிறது.
என்னென்ன விட்டமின்கள் தேவையோ, அதெல்லாம் அதில் இருக்கிறது. எனவே முட்டையை முழு முட்டையாகவே சாப்பிட்டு பழகுங்கள். அதில் இருக்கும் மஞ்சள் கருவை தூக்கி எறிய தேவையில்லை. இதய நோயாளியாக இருந்தாலும் மஞ்சள் கருவை தூக்கி போட வேண்டாம்.
தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதன்மூலம் உங்களுக்கு நல்ல புரதச் சத்தும் நல்ல கொழுப்பு சத்தும், விட்டமின்களும், தாது உப்புகளும் கிடைக்கும். எனவே முட்டை குறித்து மூடநம்பிக்கையை இத்துடன் விட்டுவிடுங்கள். இவ்வாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விளக்கத்தை ஏற்று இனி முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து உண்போமாக!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications