பிரியாணி ‘நோ’! சிக்கன் வேண்டாம்? மோர் குடிங்க.. குடல் புற்றுநோய் வராது! சிவராமன் தரும் டிப்ஸ்
தமிழ்நாட்டில் சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தக் கோடை வெயில் என்பது வழக்கமாக மக்கள் எதிர்கொள்வதைப் போல அல்ல. ஆகவே அஜாக்கிரதை கூடாது என்று மருத்துவர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்த வெப்ப அலை ஆளையே காலி செய்து விடும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.
இந்த வெப்ப அலையிலிருந்து உடலைக் குளுமையாக வைத்துக் கொள்ள எந்த மாதிரியான இயற்கை உணவுகள் உட்கொள்ளலாம். அதற்கான டிப்ஸ் தருகிறார் மருத்துவர் கு.சிவராமன்.
அவர் பேசுகையில், “முதலில் அதிக நீர் குடிக்க வேண்டும். வழக்கமான காலங்களில் குடிக்கும் நீரைவிட அதிக அளவு குடிக்கவேண்டும். பலர் வழக்கமாக எவ்வளவு நீர் குடிக்கிறார்களோ அதே அளவுதானே எடுத்துக் கொள்கிறோம் என்ன நினைத்து விடுகிறார்கள். அது தவறு.
கோடைக்காலங்களில் நம்மை அறியாமல் உடலிலிருந்து நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடம்பை குளுமையாக்க உடல் போராடும். ஆகவே வேர்வை சுரப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் நீரின் அளவு உடலில் குறைய ஆரம்பிக்கும். உடலில் உள்ள நீரின் அளவு ஒரு சதவீதம் குறைந்தாலே அது கெடுதல்.

ஆகவேதான் கோடைக் காலங்களில் நீராகாரம் சாப்பிடச் சொல்கிறோம். பழைய சோறு பெஸ்ட் என்கிறோம். இளம் தலைமுறையினர் அதை விரும்புவதில்லை. நீராகாரத்தில் புரோபயாடிக். அதை உட்கொள்வதால் குடலில் உள்ளே இருக்கின்ற நல்லது செய்கின்ற பாக்டீரியாக்களை வளர்க்கும்.
மேலும் இந்த நீராகாரத்திலேயே உடலுக்கு நல்லது செய்யக் கூடிய bacteria lactobacillus என்பது இருக்கிறது. ஆகவேதான் ப்ரீ பயாடிக் ஆகவும் புரோ பயாடிக் ஆகவும் நீராகாரம் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது என்கிறோம்.
எவ்வளவு சொன்னாலும் குழந்தைகள் நீராகாரம் குடிக்க விரும்பவில்லை. அதற்கு என்ன செய்வது என்று பலர் கேட்கிறார்கள். அதற்குப் பதிலாக வெள்ளைப் பூசணி ஜூஸ் தரலாம். அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதன் உள்ளே இருக்கும் சதையை மட்டும் ஜூஸ் ஆக அடித்துக் குடிக்கச் சொல்லலாம்.

அப்படி இல்லை என்றால் கூழ் கொடுக்கலாம். கம்பங்கூழ் அல்லது கேழ்வரகு கூழ் குடிக்கலாம். அதில் சிறிய வெங்காயம், மோர் சேர்த்துக் குடிக்கலாம். அது மிகமிக நல்லது.
இளநீர் குடிக்கலாம். தினம் ஒரு இளநீர் குடித்தால் நல்லது. அப்படி முடியாதவர்கள் மோர் குடிக்கலாம். இளநீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற நிறையக் கனிமங்கள் உள்ளன. உடல் சோர்வு ஏற்படும் போது ஒரு இளநீர் குடித்தால் உடல் உடனே சுறுசுறுப்பாகிவிடும்.
மோர் உடலைக் குளிர்ச்சியாக்கும். கூடவே சில நல்ல பாக்டீரியாக்களை உடலுக்கு அனுப்பும். அப்போது எல்லாம் வயிறு சரியில்லை. ஆகாரம் சாப்பிடுவதற்கு முடியாமல் உள்ளது என்றால்தான் புரோபயாடிக் உணவுகளை உட்கொள்ளச் சொல்வார்கள். அது பழைய ஆய்வு.
இன்றைக்கு புதிய ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், குடல் புற்று வராமல் இருக்க புரோ பயாடிக் உணவுகள் நல்லது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆகவே மோர் குடிப்பது நல்லது.

சோடா கலந்து குளிர் பானங்களைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் மோருக்குத் திரும்பினால் உடல் ஆரோக்கியம் பெறுவது உறுதி. மோர் என்பது நேரடியாக உடலுக்கு நன்மை செய்யக் கூடியது.
வெயில் காலங்கள் வந்தாலே அதிக காரமான உணவுகள் எடுக்கக்கூடாது. கோழிக் கறி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். பிரியாணியை அதிகம் பேர் விருப்பமாகச் சாப்பிடுகிறார்கள். அந்த உணவு வெயிலுக்கு உகந்ததல்ல. அதைத் தவிர்க்கலாம். கட்டாயம் மது வகைகள் கூடவே கூடாது.
மீறி ஏதாவது புலால் சாப்பிட வேண்டும் என மனம் சொன்னால், மட்டன் அல்லது மீன் வகை உணவுகளை உட்கொள்ளலாம்.
இந்தக் கோடை வெயில் பழைய வெயிலைவிட மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் வெப்ப அலை வீசி வரும்போது துபாயில் மழைக்கு எச்சரிக்கை விட்டுள்ளார்கள். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிப் போய் உள்ளனர். ஒரு பாலைவன நாட்டில் இப்படி மழை கொட்டுகிறது.
ஆகவே, காலநிலை மாறியுள்ளதை மக்கள் உணர வேண்டும். இந்தக் கோடைக் காலத்தில் சர்க்கரை மற்றும் பிபி நோயாளிகளுக்கு திடீரென்று உடலில் நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி நீர் அருந்த வேண்டும்.
குறிப்பாக வெள்ளரிக்காய், வெள்ளைப் பூசணி, பார்லி, வாழைத்தண்டு, முள்ளங்கி ஆகிய உணவுகளைக் கூடுதலாகக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications