விஜய் இன்று எடுக்க போகும் முடிவுகள்தான்! தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே மாற்றும்! மிக முக்கிய மீட்டிங்
சென்னை: தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், உங்கள் வேலைவாய்ப்புகளை தீர்மானிக்க போகும் மிக முக்கியமான மீட்டிங் இன்று முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகத் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புச் சார்ந்த பல்வேறு திட்டங்களில் தேக்கநிலை நிலவி வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக அமைச்சர் கீர்த்தனா தொழில்துறையில் சரியாக செயல்படவில்லை என்று கடுமையான புகார்கள், விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இப்படிப்பட்டச்சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் இன்று உயர்மட்டத் தொழில்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தொழித்துறை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
முக்கியமான கட்டத்தில் மீட்டிங்
நம் மாநிலத்திற்குப் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து வருவதில் மிக முக்கியப் பங்காற்றி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் இருந்து பலர் ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர்.
இங்கே அடுத்தடுத்து அரங்கேறி வரும் உயர்மட்ட அதிகாரிகளின் விலகல்கள், தொழில்துறையின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டிற்கு இனி முதலீடுகள் வருமா என்ற அச்சத்தை, கேள்விகளை இந்த ராஜினாமா, விலகல்கள் ஏற்படுத்தி உள்ளன. இந்த முக்கியமான சர்ச்சைக்குரிய சூழலில்தான்
கடந்த சில மாதங்களாகப் புதிய தொழில் கொள்கைகள் வகுக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தொய்வு, முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் ரத்து போன்ற காரணங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடம் மாறுகிறதா என்ற கவலை முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் சில மிக முக்கியமான கொள்கை முடிவுகளை அறிவிக்கக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐடி துறையில் சரிவு
ஐடி மற்றும் தொழில்நுட்பத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான புதிய கொள்கைகள் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருப்பது, புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகாவும் தெலங்கானாவும் புதிய சலுகைகளை அறிவித்து முதலீடுகளைத் தங்கள் பக்கம் இழுத்து வரும் வேளையில், தமிழகத்தின் இந்த மந்தநிலை பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில், பின்னடைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய ஒருங்கிணைந்த தொழில்கொள்கைக்கான வரைவு ஒப்புதல் பெறப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களான புதிய சர்வதேச விமான நிலையத் திட்டம், பிரம்மாண்ட நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் காரணங்களாலும் நிர்வாகக் காரணங்களாலும் அண்மைக்காலமாகப் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.
அதேபோல், கட்டுமானத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய எஃப்எஸ்ஐ விதிமுறைகளின் திருத்தமும் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் முடக்கம் காரணமாகப் புதிய வர்த்தகக் கட்டமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை கடுமையான தேக்கநிலையைச் சந்தித்து வருகின்றன. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறையினர் எதிர்கொள்ளும் இந்த நிலப் பயன்பாடு மற்றும் எஃப்எஸ்ஐ திருத்தம் சார்ந்த சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரு நிறுவனங்களுக்குத் தேவையான தடையற்ற மின்சாரம், விரைவான ஒற்றைச்சாளர அனுமதி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications