சின்ன வெங்காயம் சூப்பர்.. சம்மர் வந்தாச்சுல்ல.. இப்படி யூஸ் பண்ணுங்க.. மூல நோய் நாலடி தள்ளி நிற்கும்

onion

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் ஏராளம்.. 4 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தாலே பல நோய்களை விரட்டியடிக்கலாம்.. கொழுப்பை கரைத்து இதயத்தை காக்கக்கூடிய சின்ன வெங்காயத்தை, வெயில் காலங்களில் அதிகம் சாப்பிட சொல்கிறார்கள் ஏன் தெரியுமா? கோடை தற்போது துவங்கிவிட்ட நிலையில், எந்தெந்த வகையில் சின்ன வெங்காயத்தை உட்கொள்ளலாம்? சுருக்கமாக பார்க்கலாம்.

சின்ன வெங்காயம், இதயம், சிறுநீரகம், மண்ணீரல், சருமம், தலைமுடி என ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியது.. ரத்தம் உறைதல், அடைப்பை நீக்கி இதய நோய்களை ஏற்படாமல் தடுக்கக்கூடிய சக்தி சின்ன வெங்காயத்துக்கு உண்டு..

சின்ன வெங்காயம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேருவதில்லை.நரம்பு தளர்ச்சி பாதிப்பு இருந்தால் சின்ன வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். விறைப்பு தன்மை உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

கொழுப்பை கரைக்கும்

உடலிலுள்ள தேங்கி கிடக்கும் கெட்ட நீரையும். தேங்கி கிடக்கும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றுகிறது சின்ன வெங்காயம்.. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றன. இதனால், செல்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.

அஜீரணம் மலச்சிக்கல் , பித்தம் தொந்தரவுகள் இருந்தால், நார்ச்சத்து மிகுந்த சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டாலே போதும்.. காரணம், இதில், அண்டிமைக்ரோபியல் தன்மை நிறைந்துள்ளது. வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாது.

கோடையில் கை கொடுக்கும் சின்ன வெங்காயம்

இன்னும் இதுபோல் பல நன்மைகள் இருந்தாலும், கோடை காலத்தில் சின்ன வெங்காயத்தை அதிகம் சாப்பிட சொல்கிறார்கள்.. ஏனென்றால், சின்ன வெங்காயம் குளிர்ச்சி நிறைந்தது.. வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் அடங்கியிருக்கின்றன.

கோடையில் சின்ன வெங்காயம் பயன்படுத்தினால், நீர்க்கடுப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் நெருங்காமல் இருக்கும்.. உடல் சூடு அதிகமாக இருந்தால், வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடிக்க வேண்டும்.. ஆசனக் கடுப்பும் நீங்கும்.

குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்கும் சின்ன வெங்காயம்

வெயில் காலத்தில் குழந்தைகள் அவதிக்கு ஆளாக நேரிடும்.. அப்போது, வெங்காயத்தை மோரில் கலக்கி அல்லது நெய்யில் வறுத்து தருவதால், வெப்பத்திலிருந்து எளிதாக பாதுகாக்க முடியும். அதிலும், தயிர், மோர், நெய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலில் குளிர்ச்சி கூடும்.. சின்ன வெங்காய சாறு குடிப்பது கொழுப்பை கரைக்கும் என்றாலும், 48 நாட்கள் சாப்பிட்டு வரும்போது, உடல் குளிர்ச்சி அடைந்து, மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

குளிர்ச்சி நிறைந்தது என்பதால்தான், மூல நோயாளிகளும் இதனை பயன்படுத்த சொல்கிறார்கள்.. 50 கிராம் வெங்காய சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாள் குடித்தால் ரத்த மூலம் கட்டுக்குள் வரும். அல்லது சின்ன வெங்காயத்தை நறுக்கி, இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மூல நோய் விலகும்.. எனவே, கோடைக்காலத்துக்கு சிறந்த உணவு சின்ன வெங்காயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+