தூங்கும் போது "இந்த" அறிகுறி இருக்கா.. இதய பாதிப்பாக இருக்கும்.. உடனே மருத்துவமனைக்கு ஓடுங்க!
டெல்லி: இந்த காலத்தில் இதய பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. நல்லா இருக்கும் நபர்கள் கூட சட்டென இதய செயலிழப்பு உயிரிழப்பும் சோகமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதய செயலிழப்பு ஆபத்து இருப்போருக்கு முன்கூட்டியே சில அறிகுறிகள் தெரியும். இதைச் சரியாகக் கண்டறிந்து தேவையான சிகிச்சை எடுப்பதன் மூலம் ஆபத்துகளை நம்மால் குறைக்க முடியும்.
முன்பெல்லாம் இதய பாதிப்பும் என்பது வயதானோருக்கு மட்டுமே ஏற்படும். ஆனால், இப்போது உணவு முறை மாற்றம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் இதய பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகிறது.

இதய செயலிழப்பு: ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் சுமார் 5.6 கோடி பேருக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உங்கள் இதயத்தில் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறையும் போது அல்லது பம்ப் செய்யும் பலத்தை இழக்கும் போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது.. உடலில் இது தொடர்பாக ஏற்படும் சின்ன மாற்றங்களை நாம் கவனிக்காமல் விட்டால் அது உயிரையே பறித்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
இதன் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் ஆபத்தான பக்கவாதம் அல்லது நுரையீரல் தமனியில் அடைப்பு போன்ற கடுமையான சிக்கல்களும் கூட ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படும். இதய செயலிழப்பு பாதிப்பு உள்ளவர்களிடையே காணப்படும் பொதுவான அறிகுறிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
படுக்கையில் படுக்கும் போது: பொதுவாக இதய பிரச்சினைகளை இருக்கும் பலருக்கும் நுரையீரலில் திரவம் குவியும். இதை நுரையீரல் வீக்கம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். காற்று சென்று வரும் வழியைத் திரவம் சூழ்ந்து கொள்வதாலேயே இதுபோல நடக்கிறது. இதனால் படுக்கும்போது சுவாசிக்கக் கடினமாக இருக்கும். குறிப்பாக மேலே பார்த்து முழுமையாக அப்படியே படுக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். இதுபோல நடக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்படும். தலையணை இருந்தால் மட்டுமே மூச்சுத் திணறல் ஏற்படாமல் தூங்க முடியும்.
இதுபோல இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள். இதய செயலிழப்பு இருப்போருக்குப் படுக்கையில் காணப்படும் மிக முக்கியமான அறிகுறியாக இது இருக்கும். எனவே, தூங்கும் போது இந்த அறிகுறி இருந்தால் ரொம்பவே கனமாக இருங்கள். மற்ற அறிகுறிகள் குறித்தும் நாம் பார்க்கலாம்.
வீக்கம்: அதேபோல கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். எல்லா வேலையையும் முடித்துவிட்டு இரவு படுக்கும் போது உங்கள் கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் இருக்கிறது என்றால் அது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் பலவீனமாக இருப்பதால் படுத்தவுடன் காலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாகவே வயிறு உட்பட மற்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது.
அதேபோல இதய பிரச்சினை இருப்போரின் உடல் எடையும் அதிகரிக்கும். முன்பே குறிப்பிட்டது போல இதய பாதிப்பு இருப்போரின் உடலில் கூடுதலாகத் திரவம் சேர தொடங்கும். இதனால் எடை அதிகரிக்கும். இதுவும் இதய பாதிப்பின் முக்கிய அறிகுறி.. எனவே கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
ஆபத்தைக் குறைப்பது எப்படி: இதய பாதிப்பு பிரச்சினையைக் குறைக்க சில டிப்ஸ்கள் உள்ளன. இதய பாதிப்புக்கு முக்கிய காரணமாகப் புகை பிடிப்பது தான். எனவே, உங்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அதை விட்டுவிடுங்கள். அதேபோல கொழுப்பு அதிகம் உள்ள உணவைக் குறையுங்கள். மேலும், தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து ஆக்டிவாக இருங்கள். இதைச் செய்தால் இதய பிரச்சினையைக் குறைக்கலாம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications