சர்க்கரை நோயாளி வாழைப்பழம் சாப்பிடலாமா? நீரிழிவு நோயாளிக்கு பெஸ்ட்? வாழைப்பழத்தை சாப்பிட உரிய நேரம்?
சென்னை: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்கள் சாப்பிடலாமா? இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? வாழைப்பழத்தை சாப்பிட உரிய நேரம் எது? வாழைப்பழங்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.!!
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை உள்ளன.. இதில் பொட்டாசியம் அளவு சற்று அதிகமாகவே உள்ளது.. அதாவது, ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் இருக்கிறதாம்.

அதனால்தான், ஆரோக்கியமான உணவுப்பட்டியலில் வாழைப்பழங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.. எனினும், சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை சாப்பிட கூடாது என்பதால், இனிப்பு நிறைந்த பழமான வாழையை சாப்பிடலாமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.
கிளைசெமிக் குறியீடு: இனிப்பு என்றாலும், இயற்கை சர்க்கரைகள்தான் வாழையில் உள்ளன.. கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த இந்த வாழைப்பழங்கள், சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்காமல் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தக்கூடியதாம்.

அத்துடன், குறைந்த கிளைசெமிக் குறியீட்டை வாழைப்பழங்கள் கொண்டுள்ளன.. அதாவது, நாம் சாப்பிடும் உணவு, எவ்வளவு விரைவாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது என்பதற்கான அளவீட்டின் பெயர்தான் கிளைசெமிக் குறியீடு என்பார்கள்.. இந்த குறியீடு குறைவாக இருந்தால், சர்க்கரை அளவு மெதுவாக உயருமாம்.
செரிமானம்: மேலும், வாழைப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், செரிமானம் சீராகிறது.. இதன்காரணமாக, ரத்த சர்க்கரை மெதுவாக கலக்கப்படுவதுடன், சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதையும் இது கட்டுப்படுத்துகிறது. எனவே மிகக்குறைவான அளவுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
உதாரணத்துக்கு பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.. செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. எனினும், ஒரு நாளைக்கு, ஒரு சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.

உரிய நேரம்: அதேபோல, அசிடிட்டி, வாயு தொந்தரவு இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிடுவதற்கும் சரியான நேரம் உள்ளது.. அந்தவகையில், மதியம் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரையே வாழைப்பழம் சாப்பிடலாம். இந்த நேரங்களில் சாப்பிடும்போது, உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, வாழைப்பழங்களை மாலை அல்லது இரவு என மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications