ஊளைச்சதை கரையணுமா? குண்டு குண்டு உடம்பு குறையணுமா? வீட்ல நெய் இருக்கா? வெயிட் லாஸுக்கு பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்.. அதேபோல, உடல்எடை குறைய பக்கபலமாக இருப்பது பச்சை காய்கறிகளும், பழங்களும்தான் என்பதை மறுக்க முடியாது.
பொதுவாகவே அனைவரும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமென்றாலும், வெறும் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ்கள், சூப்கள், டீ, கசாயம், போன்று வேறுவகைகளில் குடிக்கும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கிறது..

பட்டை தண்ணீர்: அதிலும், சாதாரண தண்ணீருக்கு பதிலாக, பட்டை ஊறவைத்த தண்ணீர், சீரகம் ஊறவைத்த தண்ணீர், சோம்பு ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால், உடல் கழிவுகள் நீங்குகிறது. அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
உடல் எடை குறைய வேண்டுமானால் சுத்தமான நெய்யின் பங்கும் அதிகமாகவே உள்ளது.. இயற்கையான அமினோ அமிலங்கள் உடைய இந்த நெய்யில், ஒமேகா 3, ஒமேகா கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருக்கின்றன.. அதனால்தான், அனைவருக்குமே நெய் நல்லது என்கிறார்கள்.. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை இந்த நெய் குறைக்கும் தன்மை கொண்டது.
நெய் போதும்: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.. தினமும் காலையில் 5 முதல் 10 மிலி நெய்யை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மெடபாலிக் அளவு அதிகரித்து, உடலுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். ரத்த ஓட்டமும் சீராகும்.
நெய்யில் உள்ள ரசா என்ற சத்தானது, நம்முடைய உடலிலுள்ள செல்களை புத்துயிர் அடைய செய்கிறது.. மூளைகள் சிறப்பாக செயல்படுகின்றன.. நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்ச்சி பாய்கிறது.. எலும்புகளின் மூட்டுகளில் இயற்கையான திரவம் உற்பத்தி செய்ய தூண்டுவதுடன், இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கும் நிவாரணமாக அமைகிறது.
சின்ன வெங்காயம்: அதேபோல, சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தாலே உடலிலுள்ள ஊளைச்சதை குறைகிறதாம்.. குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க இந்த தேன் + வெங்காயம் பயன்படுகிறது.. சின்ன வெங்காயம், தேன், இந்த இரண்டிற்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது..
தோலுரிக்கப்பட்ட சின்ன வெங்காயங்களை, ஒரு பாத்திரத்தில் மூழ்கும்வரை தேன் ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்துவிட்டால் போதும்.. 3வது நாள் இதனை பயன்படுத்த துவங்க வேண்டும்.. இதனால், கெட்ட கொழுப்பு நீங்குவதுடன், உடலின் மெட்டாபாலிசமும் அதிகரிக்க செய்து, செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றும்..
மாரடைப்பு: அதுவும், வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இதனால் நச்சுக்களும் எளிதாக நீங்கும்.. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். சுவாச கோளாறுகளும் நீங்கும். வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, கெட்ட கொழுப்பை வெங்காயம் குறைக்கிறது.
அதேபோல, தினமும் ஏதாவது ஒரு வகையில் கொய்யாவை எடுத்து கொள்ள வேண்டுமாம்.. கொய்யாப்பழம், அல்லது கொய்யா இலைகளை தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.. கொய்யா இலையில் டீ தயாரித்து, சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும்.
கொய்யா இலைகள்: அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்.. வயிறு உபாதைகள் உள்ளவர்களும் இந்த டீயை குடிக்கலாம்.. அல்லது கொய்யா இலை + புதினா இலை இரண்டையும் இரவில் நீரில் போட்டுவைத்துவிடடு, மறுநாள் காலையில் இந்த நீரை குடித்து வந்தாலும், உடல் எடை குறைய தொடங்கும்.
ஒரே ஒரு குட்டி நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் C உள்ளது. அதாவது, ஆரஞ்சு பழங்களை விட, 8 மடங்கு வைட்டமின் - C அதிகமாக உள்ளது. லவங்கப்பட்டை தூளை விட 2 மடங்கு ஆக்சிஜனேற்ற பண்பு அதிகம் உள்ளது.
அதனால்தான், எப்போதுமே நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட சொல்வார்கள்.. வெறும் வயிற்றில், நெல்லிக்காய் சாறுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குடித்துவந்தால், ஊளைச்சதை குறையும்
உடல் எடை: கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய தன்மை சுரைக்காய்களுக்கு உண்டு என்பதால், இதில் ஜூஸ் போல தயாரித்து குடிக்கலாம். சுரைக்காய்களின் தோல், விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதைகளை மட்டும் மிக்சியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து ஒரு டம்ளர் குடித்து வந்தால், கண்ணெதிரே ஊளைச்சதை குறைவதை காணலாம்.. சருமம் பொலிவாவதுடன், மன அழுத்தமும் நீங்கிவிடும்.. இதனால், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், நீர்ச்சத்துக்களும் கிடைத்துவிடும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications