சர்னு வெயிட் குறையணுமா? தொப்பை கரையணுமா? அப்ப இந்த 2 பொருள் போதுமே.. எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும்போது, உடல் எடை குறைவதில் நல்ல மாற்றம் தென்படுகிறதாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுப்பது நீர்க்காய்கள்.. இதில் சுரைக்காயை எடுத்துக் கொண்டால், 92% சதவீதம் நீர் + தாதுக்கள் நிறைந்துள்ளதுடன், வைட்டமின் A, B, C, E, K, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

நச்சுக்கள்: கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க தூண்டுகின்றன. சுரைக்காயில், இஞ்சி, புதினா, எலுமிச்சம் சாறு போன்றவை சேர்த்து ஜூஸ் தயாரித்து குடித்தால் உடலில் இருக்கும் நச்சுகள் எளிதாக வெளியேறும்..
அதேபோல, சௌ சௌ எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வயிறு, இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்க வேண்டுமானால், குறைந்த கலோரி + அதிக நார்ச்சத்து நிறைந்த சௌ சௌ காய்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஜூஸ் அல்லது சூப் போலவும் குடிக்கலாம்.
சத்துக்கள்: உடல் எடையை குறைப்பதில், ப்ரோக்கோலியை போல வேறு சிறந்த காய் கிடையாது.. A, B6, B2, E வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் உள்ளதால், உடலுக்கு நன்மைகளை தருகின்றன.. நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதுடன், கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.. மேலும், இடுப்பு, தொடை பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைய துவங்குமாம்.
அல்லது ப்ரோக்கோலி பொடியையும் பயன்படுத்தலாம். புரோக்கோலி பொடி கடைகளில் கிடைக்கிறது. அல்லது நாமே தயாரிக்கலாம்.. ப்ரோக்கோலி துருவி, வெயிலில் உலர்த்தி காயவைத்து பவுடராக்கி வைத்து கொண்டால், சூப் போல அல்லது காபி தயாரித்து குடிக்கலாம். இதுவும் உடல் எடையை குறைக்கிறது.
வேர்க்கடலை: ஆப்பிள் + வேர்க்கடலை இந்த இரண்டையும் தவறாமல் சாப்பிட சொல்கிறார்கள்.. ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.
வேர்க்கடலையில், மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியிருப்பதால், எடையை குறைக்க பேருதவி புரிகிறது. இதய நோய், சர்க்கரை நோய், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் இவை மருந்தாகின்றன. இந்த 2 பொருளையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, உடல் எடையினை வெகுவாக குறைகிறதாம்.
வெந்தய விதை: வெந்தய விதையில் கரையாத நார்ச்சத்து உள்ளதால், உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றிவிடுகிறது.. எனவே, வெந்தயத்தில் டீ போட்டுக் குடிக்கலாம்.. வெந்தய விதைகளுடன், சிறிது இலவங்கப்பட்டை, சிறிது இஞ்சி கலந்து கொதிக்கவிடடு, வடிகட்டி குடித்தாலே போதும்.
வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் உடல் எடை குறைகிறாம்.. அல்லது வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, தண்ணீரில் இரவு ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து வந்தாலும் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளதாம்.
மீன் எண்ணெய்: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தலாம்.. தினமும் 1 மீன் எண்ணெய்யை எடுத்து கொள்வதால், உடலிலுள்ள தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, எடை இழப்பை ஊக்குவிக்க இந்த மீன் எண்ணெய் உதவுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications