கேன்சரை தடுக்கும் பூலாங்கிழங்கு.. உள்ளுறுப்புகளுக்கு பலம்.. சரும நலனுக்கு வாசமுள்ள வெள்ளை மஞ்சள்
சென்னை: மாதவிடாய் கோளாறை நீக்கி, உடலுறுப்புகளுக்கு பலம் தந்து, சருமத்துக்கு பாதுகாப்பையும் தரக்கூடிய பூலாங்கிழங்குகளை பற்றி தெரியுமா?
இஞ்சியை போலவே, மாம்பழ வாசனை வீசும் இந்த பூலாங்கிழங்கிற்குள் நிறைய ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன.. அதனால்தான், இதனை வெள்ளை மஞ்சள் என்றும் சொல்வார்கள்.

புற்றுநோய் செல்கள்: மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற பொருள் இந்த கிழங்கிலும் உள்ளதால், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை பெற்றிருக்கிறது. இதனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முன்கூட்டியே தடுக்க பேருதவி புரிகிறது.
மேலும், புற்றுநோய்க்கு சிகிச்சையை தரவும் உதவுகிறது. முக்கியமாக, பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கும் சக்தி இந்த வெள்ளை மஞ்சளுக்கு உண்டு. மாதவிடாய் பிரச்சனையையும் சரி செய்வதால், இந்த பூலாங்கிழங்குகளை பெண்கள் தவிர்க்கவே கூடாது.
நுரையீரல்: குடல், இரைப்பை, நுரையீரல், என உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்கவும் இந்த பூலாங்கிழங்குகள் உதவுகின்றன.. சுவாச சளி, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, வாயு, அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளாக இருந்தாலும் சரி, இந்த பூலாங்கிழங்கு பவுடரை பயன்படுத்தி தீர்வு காணலாம்.
இதற்கு இந்த பூலாங்கிழங்குகளை காயவைத்து, இடித்து தூளாக்கி மெல்லி துணியில் வைத்து சலித்து வைத்து கொள்ள வேண்டும்... சளி, இருமல் தொண்டைக்கட்டு, காய்ச்சல் நேரத்தில், இந்த பொடியை சிறிது தேனில் கலந்து சாப்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்.. அல்லது வெறுமனே பூலாங்கிழங்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம்.
காயங்கள்: அதேபோல, உடலில் காயங்கள், புண்கள், கட்டிகள், இருந்தால் இந்த கிழங்கின் பவுடரை, சிறிது நீரில் குழைத்து பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். இது ஒரு வாசனை கிழங்கு என்பதால், அழகுசாதன பொருட்கள் தயாரிப்புகளில் மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள்..
அதேபோல, முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு மருந்தாகிறது.. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளதால், சுருக்கம் விழும் தோற்றத்தை தள்ளி போடுகிறது. எனவே, இந்த கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்து வரலாம். இதனால் சரும தொந்தரவுகளும் அண்டாது.
வாசனை பவுடர்: நாட்டு மருந்து கடைகளிலிலேயே இந்த மருந்து விற்கப்படுகிறது. பூலாங்கிழங்குடன், வெட்டிவேர், தாமரை கிழங்கு, சந்தனக்கட்டை, அகில்கட்டை, கோரைக்கிழங்கு இப்படி பலவகையான மூலிகைகளை கலந்து தயார் செய்து விற்கிறார்கள். இந்த கிழங்கு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதன் பயன்படுத்தி, பலனை அடையலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications