Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தை கத்தையா கொட்டுதா தலைமுடி.. இதை மட்டும் பண்ணுங்க.. அடர்த்தியான கரு கரு தலைமுடி கன்பார்ம்டு.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய சூழலில், தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. அந்தவகையில், சில டிப்ஸ்களை பார்ப்போம்.

முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..

Supertips to stop your Hairfall and Do you know what are the Fantastic tips for Hair Growth

அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.. அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.

மகிழ்வான மனநிலை: ஆக, நம்முடைய தலைமுடிக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது.
எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..

அடுத்ததாக கறிவேப்பிலை... இதை எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து, ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி காய்ச்ச வேண்டும். சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து தேய்த்து வந்தால், தலைமுடி கொட்டாது.

வெங்காய சாறு: அடுத்ததாக, வெங்காய சாறு பயன்படுத்தலாம்.. இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்துகின்றன.. அதிகமாக சல்பர் உள்ளதால், முடியின் வேர்களுக்கு மிகவும் நல்லது.. நரைமுடி பிரச்சனைக்கும் இந்த வெங்காய சாறுதான் தீர்வாகிறது.. முடியும் அடர்த்தியாக வளரும்..

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலுமே ஒரே மாதிரியான சத்துக்கள் உள்ளன.. இந்த வெங்காயத்தை வெட்டி எடுத்து, அதை ஒரு துணியில் கட்டி, சாறு பிழிந்து எடுத்து, இதனை தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தடவி வர வேண்டும். இதனால், பொடுகு, பேன் பிரச்சனை நீங்குவதுடன், தலைமுடியும் உறுதியாகும்.

உருளைக்கிழங்கு: இதற்கு அடுத்தபடியாக, உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம்.. அதாவது உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல், அதிலேயே தலையை அலசினால், அவ்வளவும் சத்துக்களாகின்றன..

புரோட்டீன் + ஸ்டார்ச் போன்றவை அந்த தண்ணீரில் கலந்துள்ளதால், தலைமுடி கொட்டுவதை இந்த தண்ணீர் தடுத்து நிறுத்தும். பெஸ்ட் கண்டிஷனராக பயன்படுவதால், தலைமுடியும் பளபளப்பாகும். அதனால், தலைக்கு குளித்து முடித்தபிறகு, இந்த உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் தலைமுடியை அலசினால் போதும்.. ஒருமுறை இந்த தண்ணீரில் தலைமுடியை அலசிவிட்டு, பிறகு, நல்ல தண்ணீரில் அலசிக் கொள்ளலாம்.

மஞ்சள் கரு: அதேபோல, முட்டையை பயன்படுத்தலாம்.. வெறும் வெள்ளைக்கருவை மட்டுமே தலைக்கு பயன்படுத்தாமல, புரதச்சத்து, கொழுப்பு சத்து நிறைந்த மஞ்சள் கருவையும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.. சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை முட்டையுடன் கலந்து தலைக்கு தேய்த்தால், முட்டை வாடை ஏற்படாது.

அல்லது இளநீரையும் பயன்படுத்தலாம்.. இளநீருடன், சிறிது ரோஸ் வாட்டரையும் கலந்து, தலைமுடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்துவிட்டு, 30 நிமிடம் ஊறவைத்துவிட்டு, பிறகு சுத்தமான தண்ணீரால் அலசினால் போதும். தலைமுடிக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், இளநீரில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகு வராமலும் தடுக்க உதவுகிறது

பளபள தலைமுடி: வெண்டைக்காய் தலைமுடிக்கு மிகச்சிறந்த "இயற்கை கண்டிஷனராக" செயல்படுகிறது.. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடிக்கு பளபளப்பு கிடைக்கும்.. முடிகள் உறுதியாகும். அல்லது சாதம் வடித்த தண்ணீரில் தலையை அலசி வரலாம்.. அல்லது மோரில் அலசி வரலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+