Coldrif இருமல் மருந்தால் 8 பிஞ்சுகளின் உயிர் போச்சு! Cough சிரப்பையே எடுக்கக் கூடாதா? டாக்டர் விளக்கம்
சென்னை: கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 8 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தமிழகத்திலும் அந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல் வேறு நிறுவனங்களின் இருமல் மருந்துகளையும் எடுக்கக் கூடாதா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Coldrif எனும் ப்ராண்ட் இருமல் மருந்தைப் பருகிய மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த எட்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், உடனடியாக தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் COLDRIF சிரப்களின் விற்பனை முடக்கம் செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருந்துகள் கட்டுபாட்டுக்கழகம் நடத்திய ஆய்வில் COLDRIF எனும் ப்ராண்ட் பெயர் உடைய குழந்தைகளின் இருமல் சளிக்கு தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்தில்
"டை எத்திலின் க்ளைகால்" Diethylene glycol அளவில் சற்று அதிகமாக இருந்தது. அதனால் குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது.
எனவே.. இந்த குறிப்பிட்ட ப்ராண்ட் உடைய மருந்தை தாங்கள் வாங்கியிருந்தால் அதை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். ( COLDRIF SYRUP பேட்ச் எண் SR-13 manufactured date May 2025; Expiry date April 2027) மருந்தகங்கள் இந்த ப்ராண்ட் மருந்தை விற்க வேண்டாம் என்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையும் இந்த ப்ராண்ட் மருந்தை விற்பனை செய்ய உடனடியாக தடை விதித்துள்ளது.
பின்குறிப்பு : இந்த பிரச்சனை COLDRIF எனும் இந்த ப்ராண்ட் மருந்தில் மட்டுமே இருக்கிறது. வேறு இருமல் மருந்துகளில் இந்த பிரச்சனை இல்லை . எனவே தேவையற்ற பிற வதந்திகளை நம்பி மற்ற இருமல் மருந்துகளை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை.
பின் இணைப்பு: இருமல் மருந்துகளுடன் பால் கலப்பதால் அது விஷமாக மாறாது. அப்படி பரப்பி விடப்படும் வதந்திகளில் உண்மை இல்லை. டோண்ட் வொர்ரி. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications