வழக்கறிஞரையும் உள்ளே விடல.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை பார்க்க விடாத போலீசார்.. வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இன்று அதிகாலையில் கைது செய்து போலீசார் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மார்க்கண்டேயனை பார்க்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசும்போது, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

dmk markandeyan

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசும்போது, "இவ்வளவு கேவலமான முதலமைச்சரை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. சட்டசபையில் உங்க அப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன் என முன்னாள் முதலமைச்சரை விமர்சிக்கிறார். இதுபோன்ற ஒரு பேச்சை நான் எங்கேயும் கேட்டது இல்லை. விஜய் எங்களை கோமாளி என நினைக்கிறாரா? சட்டசபைக்குள் வைத்துப் பார்த்து கொள்கிறோம். எங்களை உள்ளே வைத்து பூட்டினால் எலும்பு ஒருக்காது" என்று ஒருமையில் பேசினார்.

இந்நிலையில், தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், இன்று அதிகாலையிலேயே எம்எல்ஏவின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.

விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது BNS 351(3) (கடுமையான குற்ற மிரட்டல்), BNS 352 (அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல்), BNS 353(2) (சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை தடுத்து நிறுத்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் திமுகவினர் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்கண்டேயனை பார்க்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் வைத்து மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரைப் பார்க்க வழக்கறிஞர் சென்றுள்ளார். ஆனால், அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. உள்ளே அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+