எகிறும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.. இதுதான் முக்கிய அறிகுறி
உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நாடு முழுக்க மர்ம Influenza A subtype H3N2 காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில்தான் இதில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன.
இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மக்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதோடு கொரோனா கேஸ்களும் பரவ தொடங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

காய்ச்சல்
H3N2 வைரஸ் இன்ப்ளுயன்சா காய்ச்சல் மட்டும் நாடு முழுக்க அதிகாரபூர்வமாக 3,038 பேருக்கு ஏற்பட்டு உள்ளதாம். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் 1,245 கேஸ்கள், பிப்ரவரியில் 1307 கேஸ்கள், மார்ச்சில் இதுவரை 486 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். தமிழ்நாட்டில்தான் இதில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் 545 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். மகாராஷ்டிராவில் 170 கேஸ்கள் பதிவாகி உள்ளன. குஜராத்தில் 42 கேஸ்கள் பதிவாகி உள்ளன. பஞ்சாபில் 28 கேஸ்கள் பதிவாகி உள்ளன.

பாதிப்பு
தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன.. தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் மக்கள் எளிதாக வீட்டிற்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ வசதியை பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.. இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று காய்ச்சல் முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் காய்ச்சல் வந்த பலர் நேரடி சிகிச்சை பெற்றனர். இந்த முகாம் காரணமாக தமிழ்நாட்டில் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை முறையாக கணக்கிடப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
இதன் காரணமாகவே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன என்று கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் கேஸ்கள் இப்படி முறையாக பதிவாகவில்லை. சாதரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது. பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் மோசமானதாக உள்ளது. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

உடல் வலி
முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சின் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இருமல், சளி மற்றும் குமட்டல் வழக்குகளுக்கு மத்தியில் கண்மூடித்தனமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதாவது ஆண்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ கழகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications