கைகளுக்கு அழகு சேர்க்கும் மருதாணியில்.. எத்தனை நன்மைகள் இருக்கு தெரியுமா?
சென்னை: மருதாணி என்று சொன்னாலே பெண்கள், தங்கள் கைகளிலும், கால்களிலும் வர்ணமிட்டு, அழகு சாதன பொருளாக பயன்படுத்திக்கொள்ளவதும், முக்கியமாக பெண்களின் கேச பராமரிப்புக்கு, இளநரை, தூக்கமின்மை, கண்கள் குளிர்ச்சி பெற, மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து, முடிஉதிர்வை தடுக்க பயன்படுத்துகின்றனர். இதற்கு மருதோன்றி, அழவணம், மருதாணி என்று மற்ற பெயர்களும் உண்டு. பொதுவாக மருதாணி அரைத்து கையில் இடும்போது, செஞ்சிவப்பாக தோன்றும், ஆனால் பித்த உடம்பு உள்ளவர்களுக்கு கருசிவப்பாக இருக்கும். அடிக்கடி கைகளில் இட்டுக்கொள்வதால் நகசுத்தி நோய் வராமல் தடுக்க உதவும், இதில் ஏராளமான மருத்தவ பயன்களும், சித்தமருத்துவத்தில், தீராத வியாதிகளுக்கும் கூட தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த மரம் சிறிய புதர் போல் இருக்கும், இதின் பூ, இலை, வேர்ப்பட்டை, என எல்லாமே பயன்படுகூடியவை ஆகும். இம் மரத்தின் விதை பில்லி சூனியத்தை அகற்றும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது. மருதாணியில் உள்ள ஏராளமான நன்மைகளுக்கும், அதில் உள்ள மருத்துவ பண்புகள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கேச பராமரிப்புக்கு
கோடை காலத்தில், மாதவிடாய் நாட்களில், உடல் உஷ்ணத்தால் பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்வு ஏற்படும். தலைமுடி கொட்டுவதை தடுக்க, நீண்ட முடி வளர, மருதாணி இலையை அரைத்து, சிறு சிறு உருண்டையாக அல்லது தட்டையாக செய்து, நிழலில் உலர்த்தி, தலைக்கு பயன்படுத்தும் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு 1 வாரம் வரை ஊறவைத்து, பிறகு அதை காய்ச்சி, சூடு அறிய பின்பு வடிகட்டி பத்திரப்படுத்தி, தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும், முடி உதிர்வை தடுத்து, நீண்ட முடி, மற்றும் அடர்த்தியாகவும் வளரும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் பெறமுடியும்.
தொழுநோய், தழும்புகள் மறைய: ஒரு சிலருக்கு அடிக்கடி உடலில் அரிப்பு ஏற்படும், அதை தொடர்ந்து உடல் முழுவதும் பரவிவிடும். புறநரம்புகளில், சுவாசக்குழாயில் ஏற்படும் தொழுநோய்யாகும். இதை சரிசெய்ய, மருதாணி இலை பூக்கள் இரண்டையும் மைய அரைத்து, நன்றாக சாறு பிழிந்து, தினமும் காலை, மாலை 1/2 ஸ்பூன் அளவில் சாப்பிட்டுவர வேண்டும். ஆரம்பக்காலத்திலேயே இவை செய்தால், விரைவில் குணமடையலாம், இல்லை என்றால் நோய் தீவிரமாகிவிடும். மேலும் முகத்தில் அல்லது உடலில் தழும்புகள் மறைய, சிறிது மருதாணி இலை, 5-6 மிளகு, 2 பல் பூண்டு இவை எல்லாம் சேர்த்து, காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேகத்தழும்புகள் முற்றிலும் மறைந்துவிடும். இதை சாப்பிடும்போதெல்லாம் உணவில் உப்பு சேர்க்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பொதுவாக உடலில் அதிக வெப்பம் உள்ளவர்கள், மருதாணியின் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்து படுக்கலாம், இதனால் உடல் களைப்பு, உடல் சூடு தணியும்.

தலைவலி, தொண்டை கரகரப்பு, கால் வெடிப்புக்கு
தலைவலி போக்க, சிறிது தாய்ப்பால் எடுத்து, மருதாணி இலையுடன் சேர்த்து மைய அரைத்து, தலையில் பற்றுபோல் தடவினால், கடுமையான தலைவலி நீங்கும். தொண்டை கரகரப்பு நீங்கு, கை அளவு மருதாணி இலையை, தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், கரகரப்பு நீங்கிவிடும். கால் வெடிப்புக்கு, மருதாணி இலையுடன் சிறிது எலும்பிச்சை சாறு கலந்து மைய அரைத்து, வெடிப்புள்ள இடத்தில் தடவி வந்தால், சீக்கிரம் குணமாகும்.












Click it and Unblock the Notifications