செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!
சென்னை: செவ்வாழையை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம் என்ன தெரியுமா? ஆடிய பற்கள் கூட மீண்டும் ஈறுகளில் வலுவாகப் பிடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
பெண்கள் மற்றும் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதமாக செவ்வாழை திகழ்கிறது.. சாதாரண வாழைப்பழங்களை விட இதில் சத்துக்கள் பல மடங்கு அதிகமாக ஒளிந்துள்ளன..

செவ்வாழையின் சிறப்பு
குறிப்பாக வைட்டமின் C, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகின்றன.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பெரும் சவாலாக இருக்கும் சிறுநீரகக் கற்கள் பிரச்சினையை தடுக்கும் பேராற்றல் செவ்வாழைக்கு உண்டு.. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து, சிறுநீரகத்தில் நச்சுக்கள் சேராமல் பாதுகாக்கிறது..
முக்கியமாக குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு செவ்வாழை ஒரு சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.. இதிலுள்ள வைட்டமின் B6 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பெண்களின் கருப்பையை வலுப்படுத்துவதுடன், கருமுட்டைகள் சிதையாமல் பாதுகாத்து கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது..
48 நாட்கள் அதிசயம்
அதேபோல் ஆண்கள் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் இரண்டு செவ்வாழைப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், அவர்களின் நரம்பு மண்டலம் வலுப்பெற்று உடல் பலவீனம் நீங்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த அழுத்தத்தை 7 mm Hg வரை குறைக்கும் வல்லமை இதற்கு உண்டு..
கல்லீரல் ஆரோக்கியத்தில் செவ்வாழையின் பங்கு மிக முக்கியமானது.. தினந்தோறும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் கல்லீரலில் உள்ள கிருமிகள், நச்சுக்கள் மற்றும் தேவையற்ற தொற்றுகள் நீக்கப்படுகின்றன..
கல்லீரல் வீக்கம்
இது கல்லீரல் வீக்கத்தை குறைப்பதோடு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை பத்து மடங்கு வரை அதிகரிக்க செய்கிறது.. இதனால் செரிமான மண்டலம் சீராகி மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பாதிப்புகள் அண்டாமல் தடுக்கப்படுகிறது.. சர்க்கரை நோயாளிகள் கூட மருத்துவர்களின் ஆலோசனைப்படி மிதமான அளவில் இந்த பழத்தை உட்கொள்ளலாம்..
சரும பாதுகாப்பிற்கும் செவ்வாழை ஒரு சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.. உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, வேர்க்குரு போன்ற பாதிப்புகளை நீக்க ஒரு வார காலத்திற்குத் தொடர்ந்து செவ்வாழையைச் சாப்பிட்டு வரலாம்.. இதில் 75 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தாராளமாக வழங்குகிறது.. சருமத்தில் உள்ள வடுக்கள் மற்றும் துளைகளைச் சீராக்கி பொலிவைத் தருகிறது..
தலைமுடி, சருமம் ஆரோக்கியம்
அதேபோல் தலைமுடிப் பிரச்சினைகளுக்கும் இது தீர்வாகிறது.. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் செவ்வாழையை மசித்துக் கலந்து தலையில் தேய்த்து வந்தால், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதோடு பொடுகுத் தொல்லையும் நீங்கும்..
கண் பார்வை மற்றும் பல் ஆரோக்கியத்திலும் செவ்வாழை முக்கியப் பங்கு வகிக்கிறது.. மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள் இரவு உணவிற்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..
பீட்டா கரோட்டின் சத்து இதில் அதிகம் இருப்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் விரைவில் குணமாகும்.. மேலும் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழைச் சாப்பிட்டு வர, ஆடிய பற்கள் கூட மீண்டும் ஈறுகளில் உறுதியாகப் பிடிக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
எப்போது சாப்பிடலாம்
இவ்வளவு நன்மைகள் கொண்ட செவ்வாழையைச் சாப்பிடும் முறையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.. எப்போதும் நன்கு கனிந்த பழத்தையே சாப்பிட வேண்டும்.. உணவைச் சாப்பிட்ட உடனே செவ்வாழையைச் சாப்பிடக்கூடாது.. அப்படிச் சாப்பிட்டால் செரிமானத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பழத்தின் முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும்..
எனவே காலை உணவிற்கு முன்பாகவோ அல்லது பகல் 11 மணி அளவிலோ அல்லது மாலை நேரத்திலோ சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு உகந்தது.. முறையான நேரத்தில் சரியான அளவில் செவ்வாழையை எடுத்துக்கொண்டால், அது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications