ஆபீஸ் போக அலாரம் வைக்கும் நபரா நீங்க.. ஹார்ட் அட்டாக், பக்கவாதம் கூட ஏற்படுமாம்! மருத்துவர் வார்னிங்
சென்னை: டெய்லி காலையில் 4, 5 அலாரம் வைத்து எழுந்திருக்கும் நபரா நீங்க.. அப்போ நீங்க மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள்.. இதனால் மனச்சோர்வு , மனநல பாதிப்பு தொடங்கி பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் கூட ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். காலை 9 மணி ஆபீசுக்கு 6 மணி முதல் 4, 5 அலாரம் வைத்து அரக்கப் பறக்க எழுந்திருக்கும் நபராக நீங்கள் இருந்தால் நீங்கள் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதற்கிடையே அலாரம் குறித்து இப்போது அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதைப் படித்தால் இதன் பிறகு அலாரம் வைக்கும் போது ஒருமுறைக்கு இரண்டு முறை நீங்களே யோசிப்பீர்கள்.
ஆய்வு முடிவுகள்: UVA Health என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் காலையில் அலாரம் வைத்து அந்த சத்தத்துடன் எழுவோருக்குச் சத்தம் அழுத்தம் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது இயற்கையாக எழுவோருடன் ஒப்பிடும் போது அலாரம் வைத்து எழுவோரின் ரத்த அழுத்தம் 74% வரை அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல அலாரம் வைத்து நாம் எழுந்திருப்பது காலையில் ரத்த அழுத்த எழுச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாக நாம் தூங்கி எழும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், இதுபோல அலாரம் வைத்து அதன் சத்தத்தில் எழுந்தால் அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறுகிய நேரத்தில் ரொம்பவே அதிகமாக உயர்த்துகிறதாம்.
ரத்த அழுத்தம்: இப்படி ஒவ்வொரு நாளும் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பது நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.. மேலும், ஆபத்தான சூழல்களில் ஏற்படும் fight or flight (ஆபத்து ஏற்படும் போது அதை எதிர்த்துப் போராட வேண்டுமா அல்லது அங்கிருந்து ஓட வேண்டுமா என்பதை முடிவு செய்ய உதவுவது) ரெஸ்பான்ஸை உடலில் ஏற்படுத்துகிறது.
இது நமது இதயத்திற்குக் கூடுதல் பளுவை ஏற்படுத்தி, கடினமாக வேலை செய்ய வைக்கிறது. இதனால் சோர்வு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்களும் ஏற்படுகிறது. இது குறித்த விரிவான ஆய்வை வெர்ஜீனியா ஹெல்த் சிஸ்டம் பல்கலைக்கழகத்தின் நர்சிங் மாணவர்கள் நடத்தியுள்ளனர். அதில் ரத்த அழுத்தம் தொடர்ந்து இதுபோல அதிகாலை நேரத்தில் அதிகரிப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான இதய பிரச்சினைகளை ஏற்படுத்துவது அதில் தெரிய வந்துள்ளது.
ஹார்மோன் பிரச்சினை: அதிலும் ஏற்கனவே இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு மன அழுத்தம் தொடங்கி மிகச் சிக்கலான பாதிப்பும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் மருத்துவமனையில் அடமிட் ஆகும் சூழல் கூட ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அலாரம் வைப்பதால் நாம் திடீரென எழுவோம் இது ஸ்டிரஸ் ஹார்மோன்களைத் தூண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகள் இருப்போருக்கு இது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும். அவர்கள் போதிய தூக்கமின்மையுடன் சேர்ந்து அலாரத்தால் திடீரென எழுந்தால் அது ரத்த அழுத்தத்தை அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கிறது. அலாரம் வைத்து எழுவது உடலில் பலவித மோசமான தாக்கத்தை ஏற்படுத்தவதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.
தூக்க மந்தநிலை: நல்லா தூங்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென அலாரம் அடித்து எழுவது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைத் தூண்டி, உடலின் இயற்கையான தூக்கச் சுழற்சியைச் சீர்குலைத்து, தூக்க மந்தநிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. இதனால் கண் விழித்த பிறகும் சுமார் 2 மணி நேரம் வரை ஒரு வித மந்த நிலையே நமக்கு இருக்கும்.
நாம் சோர்வாகவே உணர்வோம். இது மன ஆரோக்கியத்தையும் மனநிலையையும் பாதிக்கிறது.. இத்துடன் போதியளவில் நாம் தூங்காமல் இருந்தால் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். மேலும் சோர்வு, மூச்சுத் திணறல், பதட்டம், மூக்கில் ரத்த வழிவது மற்றும் தலைவலி ஆகியவையும் கூட ஏற்படும். சில நேரங்களில் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் கூட ஏற்படும். எனவே, அடுத்த முறை அலாரம் வைக்கும் போது ஒரு முறை இரண்டு முறை யோசிங்க மக்களே..!












Click it and Unblock the Notifications