Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்துமா பிரச்சினையால் அவதியா? ஹைதராபாத்தில் இன்று முரல் மீன் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆஸ்துமா பிரச்சினை குணமாவதற்காக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கியது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் மீன் பிரசாதத்தை உண்டனர்.

fish prasadam

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் 8ஆம் தேதி மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் உயிருள்ள முரல் மீன் குஞ்சுகளின் வாயில் மருந்து வைக்கப்பட்டு அதை பாதிக்கப்பட்டவர்களின் தொண்டையில் வைத்து அவர்களை விழுங்கச் செய்கிறார்கள். இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்து சிகிச்சையை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் கூடுகிறார்கள்.

இன்று இந்த நிகழ்வை தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர் மகேஷ் குமார் கவுடா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த பாதினி குடும்பத்தினர்தான் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முரல் மீன் குஞ்சின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. சைவம் சாப்பிடுவோருக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படுகிறது.

ஆஸ்துமா, சுவாச பிரச்சினை உள்ளவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து மீன் பிரசாதத்தை சாப்பிடுகிறார்கள். இதற்காக தெலுங்கானா அரசு இவர்களுக்கு மீன் குஞ்சுகளை வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு நாளை முடிவடையும். ஆண்டுதோறும் இரு நாட்கள் வழங்குகிறார்கள்.

இத்துடன் அடுத்த ஆண்டுதான் வழங்குவார்கள். இந்த மீன் மருந்தை பெற நோயாளிகள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு முன்னதாக பதிவுகள் தொடங்கும். மஞ்சள் நிறத்தினாலான மருந்தை பாத்தினி குடும்பத்தினர் தயார் செய்கிறார்கள். அந்த மருந்தில் என்னென்ன போடுவார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

இந்த மருந்தை விழுங்கும் நோயாளிகள் ஒரு 45 நாட்களுக்கு குறிப்பிட்ட டயட்டை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதால் பாத்தினி குடும்பத்தினர் இலவசமாக மருந்தை கொடுத்து வருகிறார்கள்.

இந்த பாத்தினி குடும்பத்தினர் 170 ஆண்டுகளாக மீன் மருந்தை வழங்கி வருகிறார்கள். ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் மிருகசிரீஷம், கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்த மீன் மருந்து தரப்படுகிறது. நீண்ட கால ஆஸ்துமாக்களுக்கு, இந்த மருந்தை 3 ஆண்டுகளுக்கு சாப்பிட்டால் போதுமானது என்கிறார்கள். 60 ஆண்டுகளாக இந்த மருந்து வழங்கி வந்த ஹரிநாட் கவுட் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+