ஆசனவாயில் ரத்தமா? துத்திக்கீரை மருந்தாகும்.. உஷ்ணம் முதல் கருப்பை கோளாறு வரை உதவும் துத்தி இலை தூள்
சென்னை: துத்திக்கீரையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த கீரை பார்ப்பதற்கு ஹார்ட் வடிவத்தில் இருக்கும்.. தித்திப்பு சுவையுடன் இருக்கும். இந்த இலையின் காய்கள் சக்கரம் போல தொங்கும்.. இந்த துத்தியின் இலைகளும், வேர்களும், பூக்களும், மட்டைகளும் என அனைத்துமே உடலுக்கு நன்மையை தரக்கூடியது. அந்தவகையில் துத்திகீரையின் மருத்துவ குணம் என்னென்ன? இந்த கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
துத்திக்கீரை என்றால் வித்தியாசமாக பார்க்க தேவையில்லை.. மற்ற கீரைகளை போலவே சமைத்து சாப்பிடக்கூடியதுதான்.. ஆனால், இதன் அருமை தெரியாததால், பலரும் பயன்படுத்துவதில்லை..

துத்திக்கீரை நன்மைகள்
இந்த கீரையில் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பச்சையாகவே இக்கீரையை அரைத்து குடிக்கலாம், அல்லது ரசம் வைத்து சாப்பிடலாம்.. மற்ற கீரைகளை போல மசித்து, கூட்டு போல வைத்து சாப்பிடலாம். துத்திக்கீரையில் ரசத் வைத்து குடித்தால், கிட்னி, கல்லீரல் பிரச்சனைகள் அண்டவே அண்டாது என்பார்கள்.
நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் துத்திக்கீரையில் உள்ளதால் காயங்களை ஆற்றி, புதிய சருமத்தை ஏற்படுத்த உதவுகின்றன. மேலும் துத்திக்கீரையில் கேலிக் மற்றும் டையூரிக் அமிலம் உள்ளதால் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
குளிர்ச்சி நிறைந்த இந்த கீரையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், எப்பேர்ப்பட்ட மூலநோயும் தீரும் என்பார்கள்.. சிறுநீர் எரிச்சல், வாய்ப்புண், குடல், கட்டிகள், புண்கள், ஆசனவாய் புண்கள், வலிகள், எரிச்சல் போன்ற உஷ்ணம் தொடர்பாக வரக்கூடிய தொந்தரவுகளுக்கு துத்தி இலைகள் பயன்படுகின்றன.
கருப்பை கோளாறுகள்
இந்த கீரையை தூள் செய்து, பசும்பாலில் கலந்து குடித்தால், உடலிலுள்ள மொத்த உஷ்ணமும் பறந்துவிடும். துத்திக்கீரையிலிருந்து சாறு எடுத்து, அதில் சிறிது அரிசி மாவு கலந்து, உடம்பில் கட்டிகளுக்கு தடவலாம்.. இதனால் கட்டிகள் பழுத்து உடைந்துவிடும்..
உடலில் உஷ்ணம் அதிகமாகிவிட்டால், பெண்களுக்கு வெள்ளைப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும். மாதவிலக்கு தொந்தரவு முதல் கர்ப்பப்பையில் எந்த பிரச்சனை வந்தாலும், துத்திக்கீரையை சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி சுடுசோற்றில் பிசைந்து சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும்.
துத்திக்கீரையின் சாற்றில் வசம்புவை நெருப்பில் சுட்டு, அந்த கரியை சிறிது சேர்த்து வெறும் வயிற்றில் 3 நாள் குடித்து வரும்போது, மாதவிடாயின்போது ஏற்படும் வயிறு வலி குறையும். எனவே வாரம் ஒருநாளாவது துத்திக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால், பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் நெருங்குவதில்லை.
உஷ்ணம் - எலும்புகள்
உஷ்ணம் காரணமாக ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கும் துத்திக்கீரைகள் மருந்தாகின்றன.. தாது விருத்தியை பெருக்குவதற்கு, துத்திப்பூக்கள் மருந்தாகின்றன.. இந்த பூக்களை சுத்தம் செய்து, பசும்பாலுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி, பனங்கற்கண்டு கலந்து குடிப்பதால் ஆண்மை கோளாறுகள் நீங்கும்.
அதேபோல துத்திக்கீரையின் சாற்றினை, பசுமோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.. அல்லது இந்த கீரையின் இலைகள், பூக்கள், வேர்கள், காய்கள், என அனைத்தையுமே சுத்தம் செய்து, நீர்நிறைந்த பாத்திரத்தில் போட்டு கொதிக்க விட்டு, கஷாயம் போல குடிக்கலாம்.
எலும்புகள் முறிந்துவிட்டால், துத்திக்கீரையை விழுதாக அரைத்து பூசி, ஒரு சுத்தமான மெல்லிய துணியில் கட்டி வைத்திருக்கலாம்.. அசையாமல் அப்படியே வைத்திருந்தால், முறிந்த எலும்புகளும் விரைவில் ஒன்றுகூடிவிடும்.
ரத்தம் சுத்திகரிப்பு
துத்தி இலையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருவதால், ரத்தம் சுத்திகரிக்கப்படும். துத்தி செடியின் வேர்களும் மருத்துவ குணம் நிறைந்தவை என்பதால், இந்த வேரை பயன்படுத்தி கசாயம் தயாரிப்பார்கள்.. இந்த கசாயம், குடித்து வருவதால், பக்கவாதம் தடுக்கப்படுகிறது.
துத்தி இலையின் சாறை காலை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்து வந்தால் மலச்சிக்கல் வராது. துத்திக்கீரையின் சாற்றில், சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், ரத்த வாந்தி நிற்கும் என்பார்கள்.
சர்க்கரை நோயாளிகள்
துத்திக்கீரையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஏராளமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கீரை ஏற்றது.. இதை சாப்பிட்டு வரும்போது இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.. இதன்மூலம் டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது..
எனவே, துத்திக்கீரை பவுடருடன் சிறிது இலவங்கப்பட்டையை சேர்த்து நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம். எனவே எலும்பு முறிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவது அவசியமாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications