Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடலாமா? முள்ளங்கியோடு? வெயிலுக்கு வெள்ளரி.. நன்மையும், சத்தும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில் காலம் வந்துவிட்டது.. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை தவிர்க்கவே முடியாது. அந்தவகையில், மிக முக்கியமானது வெள்ளரிக்காய்.. இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதிக சத்துக்கள்ள வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடலாமா? எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது? சுருக்கமாக பார்ப்போம்,

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன..இதில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம்.. அதாவது, 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது.. மிச்சமுள்ள 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் B, ஓரளவு வைட்டமின் C உள்ளது.

Cucumber Mutton radish

வெள்ளரியிலுள்ள சத்துக்கள் என்னென்ன

அது மட்டுமல்ல, வெள்ளரிக்காயில் ஸ்டேரோல் என்ற பொருள், உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.. வெள்ளரியிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க செய்கிறது.. ரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.. எனவேதான் BP உள்ளவர்களும் வெள்ளரியை தவறவிடக்கூடாது என்பார்கள்.

நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்கிறது.. இதய நோய் அபாயம் குறைவதுடன், ஆரோக்கியமான எடை மேலாண்மையை நிர்வகிக்க செய்கிறது. கண் பார்வை கூர்மையடைகிறது.. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. தயிரில் இந்த வெள்ளரி விதைகளை கலந்து சாப்பிட்டால் சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை கரைத்துவிடும்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நன்மைகள்

வெள்ளரிக்காயை சாப்பிட்டு வருவோர்க்கு சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீரத்தில் கல் போன்றவை ஏற்படுவதில்லை.. இரைப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றலை தந்து, எலும்புகள், பற்களை பலப்படுத்துகிறது. அவ்வளவு ஏன்? புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தலிலும் வெள்ளரிக்கு பெரும் பங்கு உண்டு.

இத்தனை சத்துக்கள் இருக்கும் இந்த வெள்ளரிக்காயை சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதனால், செரிமான பிரச்சனை, அஜீரணம், மந்தம், உப்பசம் உள்ளிட்ட தொந்தரவுகள் வரலாம்.

எந்தெந்த உணவுகளில் தவிர்க்கலாம்

அந்தவகையில், வெள்ளரிக்காய் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. வெள்ளரிக்காயில் ஏற்கனவே நிறைய தண்ணீர் இருப்பதால், அது விரைவாக ஜீரணமாகும். ஆனால் உடனே ஜீரணமாகாது. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.

வெள்ளரிக்காயை இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இறைச்சியிலும் நிறைய புரோட்டீன், கொழுப்புகள் உள்ளதால், செரிமானம் ஆகநீண்ட நேரமாகும். ஆனால், வெள்ளரி உடனே ஜீரணமாகிவிடக்கூடியது.

சிட்ரஸ் பழங்கள் - வெள்ளரி

அதேபோல, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து வெள்ளரியை சாப்பிடக்கூடாது.. இதனால், செரிமான செயல்பாட்டில் குழப்பம் ஏற்படலாம். இதில் தக்காளியையும் சேர்த்து கொள்ளலாம். தக்காளி விதைகள் எளிதில் ஜீரணமாகாது. ஆனால், வெள்ளரி சீக்கிரத்தில் ஜீரணமாவதால், தக்காளியுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளரிக்காயை முள்ளங்கியுடன் சாப்பிடக்கூடாது. வெள்ளரியிலுள்ள அஸ்கார்பினேஸ் என்ற நொதி, முள்ளங்கியிலுள்ள வைட்டமின் C சத்தை அழித்துவிடுமாம். எனவே எந்த வகையிலும் வெள்ளரிக்காயை முள்ளங்கியுடன் சேர்க்க வேண்டாம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+