பசித்தவனுக்கு பனங்கிழங்கு.. ஆண்மையை அதிகரிக்க உதவும் கிழங்கு.. கருப்பை கோளாறு, ரத்தசோகையை தீர்க்கும்
சென்னை: வளரும் குழந்தைகளுக்கு எலும்புகள், பற்கள் பலம்பெற பனங்கிழங்கை தர சொல்வது ஏன் தெரியுமா? கர்ப்பப்பை கோளாறுகளை பனங்கிழங்குகள் நீக்குகின்றனவா? ரத்த சோகை குறைபாடு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் பனங்கிழங்கு சாப்பிடலாமா? புற்றுநோய் அபாயத்தை குறைக்கக்கூடிய பனங்கிழங்குகள் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பனங்கிழங்கில் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதனால், மலச்சிக்கல் தொந்தரவும் தீரும்.. ஒமேகா 3 சிறந்த மூலமாக உள்ள பனங்கிழங்குகள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பெருக்குகிறது.. இது இதயத்துக்கு ஆபத்துக்களையும் குறைக்கின்றன.. உடலிலுள்ள செல்களை பராமரித்து, உறுப்புகளையும் பழுதாகாமல் பாதுகாக்கிறது..

குறையும் புற்றுநோய் அபாயம்
சமீபகாலமாகவே பெண்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது புற்றுநோய்.. ஆனால், ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ள பனங்கிழங்குகளில், வைட்டமின் A, அமினோ அமிலங்கள், புரோட்டீன் நிறைந்துள்ளதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்க செய்கின்றன.
அதுமட்டுமல்ல, ரத்த சோகை என்பது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சனையாகும்.. மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தாலோ அதற்கும் இந்த பனங்கிழங்கு உதவுகிறது.. அந்தவகையில், 35 வயதை கடந்தவர்கள், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டுபவர்கள், பனங்கிழங்கு சாப்பிட வேண்டும். இதனால், புதிய ரத்தம் உற்பத்தியாவதுடன், ரத்த செல்களும் பராமரிக்கப்படும்.
இன்சுலின் உற்பத்தி
பனங்கிழங்கில் Low glycemic index உள்ளது. இந்த வேதிப்பொருள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.. எனவேதான், நீரிழிவு நோயாளிகளும் பனங்கிழங்கினை சாப்பிடலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதாக சொல்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், குறைவான அளவு பனங்கிழங்கை எடுத்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் சாப்பிடலாமா
பனங்கிழங்கில் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம். பனங்கிழங்கை வேகவைத்து, அதில் பனைவெல்லம் கலந்து சாப்பிடும்போது, கருப்பை பாதிப்புகள் விலகும்.. பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடும்போது, வலுவிழந்த கருப்பையும் பலம்பெறும். ரத்தக் கொழுப்பு கட்டிகள் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும் தன்மை இந்த கிழங்குகளுக்கு உண்டு..
மேலும் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துவதோடு எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவுகிறது. திசுக்களின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
எலும்பு தொந்தரவுகள்
எலும்பு தொந்தரவு உள்ளவர்கள், வாதம் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், பனங்கிழங்கு தாராளமாக சாப்பிடலாம்.. இதில், கால்சியம் நிறைந்துள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலிமையை தருகின்றன. இதனால், எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு என எலும்பு சம்பந்தமான பாதிப்புகளும் நெருங்குவதில்லை.. முக்கியமாக, மெக்னீசியம் சத்து உள்ளதால், எலும்புகள் ஆரோக்கியமாக வைத்திருக்க தூண்டுகிறது.
உஷ்ண உடல் கொண்டவர்கள், பனங்கிழங்கினை சாப்பிடுவதால் குளிர்ச்சி பெறலாம். புரதச்சத்து தேவைப்படுவோர் பனங்கிழங்கை சாப்பிடலாம்.. பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications