கருவில் உள்ள குழந்தைகளை தாக்கும் "ஜிகா": மகாராஷ்டிராவில் 8 பேருக்கு பாதிப்பு-மத்திய அரசு எச்சரிக்கை!
டெல்லி: மகாராஷ்டிராவில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இதர மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்கள் விடுத்துள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையில், நிலைமையை கண்காணிக்கவும், ஏடிஸ் கொசுக்கள் இல்லாத வகையில் வளாகங்களைப் பராமரிக்கவும் சுகாதார நிறுவனங்கள்/ மருத்துவமனைகளுக்குத் தொடர்பு அலுவலரை அடையாளம் காணுமாறும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைச் சேர்ந்த சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அருள் கோயல் மாநிலங்களுக்கு அறிவுரை குறிப்புகளை அனுப்பியுள்ளார். நிலைமையை கண்காணிக்கவும், ஏடிஸ் கொசுக்கள் இல்லாத வகையில் வளாகங்களைப் பராமரிக்கவும் சுகாதார நிறுவனங்கள்/ மருத்துவமனைகளுக்குத் தொடர்பு அலுவலரை அடையாளம் காணுமாறும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என்றும் அந்த அறிவுரை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.
டெங்கு, சிக்குன்குனியா போன்று ஜிக்கா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் வைரல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2016-ம் ஆண்டு குஜராத்தில் முதலாவது ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.
2024-ல் (ஜூலை 2 வரை) மகாராஷ்டிராவில் 8 ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications